Wednesday, September 27, 2023

பங்கு சந்தை ஆப்ஷன் டிரேடிங் (STOCK MARKET - OPTION TRADING) - ஓர் உளவியல் பார்வை: பகுதி - 3

ஆப்ஷன் டிரேடிங்கை வெற்றிகரமாக தொடர்ந்து செய்துபவர்கள் குறித்து மகிழ்ச்சி. வாழ்த்துக்கள். இது அவர்களுக்கான பதிவு அல்ல. தொடர் நட்டமும் எப்போதாவது சிறு லாபமும் பார்க்கிற, மொத்தத்தில் நட்டம், கோபம், வேதனையில் இருப்பவர்களுக்கான அடிப்படையான, ஆழமான, உளவியல் ரீதியான பதிவே இது.

இங்க ஜெஸ்ஸி ஜெஸ்ஸின்னு சொல்லுதா?

டிரேடிங் என்பதன் அர்த்தம் வியாபாரம். இது ஒரு பொதுவான வார்த்தை.

உலகத்துல எத்தனையோ டிரேடிங் இருந்தும் நான் ஏன் ஸ்டாக் டிரேடிங்க்கு வந்தேன் தெரியுமா? என்று பங்குகளை வாங்கி, சில காலம் வைத்து விற்கும் வர்த்தகத்தில் இருப்பவர்கள் புத்திசாலிகள். (SWING, SHORT TERM, LONG TERM STOCK TRADING. NOT STOCK / INDEX OPTION).

எத்தனையோ ஸ்டாக்ஸ் இருந்தும் நான் ஏன் STRATEGICAL OPTION SELLING தொழிலுக்கு வந்தேன் தெரியுமா என்றால், இவர்களும் புத்திசாலிகள். (முதலீடு 15 முதல் 30+ லட்சம்)

டிரேடிங் அடிப்படைப் புரிதல்

மேற் சொன்ன இரு வகை வர்த்தகர்களுக்குமான லாஜிக்கைப் புரிந்து கொள்ள முயற்சிப்போம்.

நேரம் மிகவும் மதிப்பு வாய்ந்தது. ஒவ்வொரு மணித்துளியும் ஒன்று பணம் ஈட்ட வேண்டும்.

தனது படிப்பு அல்லது திறமையை வைத்து ஒரு கம்பெனியில் வேலை செய்யலாம். அல்லது முதல் கணிசமாக (அதிகம்) வைத்து வியாபாரம் (PREMIUM BUSINESS) தொழிலை செய்யலாம். லாபம் குறைவாக வந்தாலும் தொடர்ச்சியான வருவாய் (CONSISTENT INCOME) சாத்தியம். சிறு நட்டங்கள் பெரிதாக பாதிக்காது.

தொழில் செய்வோர் பின்னணி

எனக்கு ரியல் எஸ்டேட் தொழிலில் வருமானம், கட்டிடம், கடை, வ்வீட்டு வாடகை வருகிறது, முதலீடுகளிலிருந்து போனஸ், வங்கி சேமிப்பு, தங்கம் கையிருப்பு, அந்த வகையில் இன்னொரு பிசினஸ் OPTION SELLING. எல்லாவற்றிற்கும் அதனதன் முதலீட்டு தொகையைப் பொறுத்து மாதாமாதம் ஒரு நிலையான தொகை வருமானமாக வந்து கொண்டிருக்கும். அதே போன்றுதான் OPTION SELLING-லிருந்தும் வர வேண்டும் என்று நினைப்பது.

தினம் தினம், நொடிக்கு நொடி MTM பார்த்து, குடும்பத்தார், பொழுதுபோக்கு, நண்பர்களை விட்டு தள்ளி இருந்து, உலக பொருளாதார நிகழ்வுகளை கவனித்துக் கொண்டு, தூக்கம் தொலைத்து வர்த்தகம் செய்ய வேண்டிய அவசியமில்லை. அப்படி ஒரு வர்த்தகம் அல்ல, எந்த வேலை செய்தாலும் அது அர்த்தமற்றது. முட்டாள்தனம்.  

கணித்த திசைக்கு எதிராக மார்க்கெட் போனால் ADJUSTMENT STRAGEGY ஆர்டர் செய்துவிட்டு அமைதியாக இருப்பது. (மாத இறுதியில் அல்லது எதிர்பார்த்த சதவீத லாபம் வந்ததும் வெளியேறுவது.) பெரும் தொழில் அதிபர்களின் பாதையிலேயே பயணிக்கிறோம் என்கிற நம்பிக்கையே பலம்.

ஆப்ஷன் பையர்களின் மனநிலை

ஆபீஸில் MANAGER / TEAM LEAD PRESSURE, POLITICS, கைகட்டி பதில் சொல்ல புடிக்கவில்லை. கோபமாக அவர்களை கெட்ட வார்த்தையில் திட்டி, வேலையை விட்டுட்டு டிரேடிங் பண்ணி சுதந்திரமா இருந்துக்கலாம் என உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுப்பது. அல்லது கடன் வாங்கி டிரேடிங் பண்ணி கோடீஸ்வரனாக முடிவெடுப்பது.

LOGICAL & SUCCUESSFUL JOB SCENARIO

வேலைக்கு செல்லும் முன்பு, குறைந்தது (12 வருட பள்ளி படிப்பு + 3/4 வருட கல்லூரி படிப்பு) 15 வருட படிப்பிற்கு பின்பு, அது தொடர்புடைய ஒரு வேலையில் சேர்கிறோம். 5 வருடங்கள் பணி புரிந்த பின்புதான் மாதம் 1 லட்சம் சம்பளத்தை எட்டிப் பார்க்க முடிகிறது. அதுவும் பெரிய கம்பெனியாகவும், நாமும் பெரும் திறமைசாலியாகவும் இருந்தால் மட்டுமே.  

மாத சம்பளம் 20 ஆயிரமோ, 1 லட்சத்திற்கும் மேலோ, எந்த கம்பெனியில் எந்த நிலையில் வேலை செய்தாலும் (EMPLOYEE) நமது நேரம், உடலுழைப்பு, அறிவை முதலாளிகளுக்கு கொடுத்துதான் பொருளீட்ட முடியும். (LOGIC). 12 வருட உழைப்பு, படிப்பு, ஒழுக்கம், பயிற்சி, பொறுமையின் விளைவுதான் நமது மாத சம்பளம் மற்றும் LIFE STYLE.

இன்று நமது மனைவி, குழந்தைகள், குடும்ப பராமரிப்பு, வாகனம், உடை, ருசியான உணவு, சுற்றுலா, பொழுதுபோக்கு, பிற அனுபவங்கள் அனைத்தையும் கொடுத்திருப்பதும் நமது 12 வருட படிப்பு, பொறுமை, ஒழுக்கம்தான்.

ஒரு நிறுவனத்தில் வேலை செய்து, குடும்பத்தை பராமரிப்பது ஒரு சாதனை. வேலையை நேசிப்பதை விடுத்து, அதன் மேல் ஏன் வெறுப்பு?

சாத்தியமான வளர்ச்சிப் பாதைகள்

முதலில் நாம் செய்து கொண்டிருக்கும் தொழில் அல்லது வேலையில் நிச்சயமாக முன்னேறுவதற்கான சாத்தியக்கூறுகள் என்னென்ன என யோசிக்கலாம்.

நாம் செய்யும் வேலையிலேயே அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கான திறமைகளை வளர்த்துக் கொள்ளலாம். (HIGHER STUDIES, ADDITIONAL SKILL DEVELOPMENT, SHIFTING TO GOOD COMPANY ETC)

நாம் வேலையையே ஒரு தொழிலாக மாற்றி செய்வதற்கான வாய்ப்பு குறித்து யோசிக்கலாம். (DATA ENTRY OPERATOR TO DTP SHOP, HOTEL COOK JOB TO SMALL TIFFIN CENTER OR HOME MESS, NURSING JOB TO NURSING AGENCY ETC) உண்மையில் வளர்ச்சி பற்றி இப்படி நாம் ஆரோக்கியமாக யோசிக்கிறோமா?

நிலையான, அமைதியான, வசதியான வாழ்க்கையை வழங்கும் வேலையை உதறித்தள்ளி, FULL TIME TRADING-ல் வாழ்க்கையை முன்பு இருந்ததைவிட சிறப்பாக தொடர்ந்து நிர்வகிக்க முடிந்தால் சிறப்பு.

ஆனால் நிலைமை மோசமாக இருக்கும்போது, அடிப்படையான விஷயங்களை யோசிக்க வேண்டியது அவசியம்.

வேலையை சுரண்டல் என்று நினைப்பதும், சுதந்திர விரும்பியாக நினைப்பதும் அவரவர் தனிப்பட்ட கருத்துதான். உணர்ச்சிவசப்பட்டு தொழில் ஆரம்பிப்பதற்கும், பாதுகாப்பான திட்டமிடலோடு, அறிவோடு தொழில் தொடங்குவதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.

பண்ணைத் தொழில், விவசாயம், ஆர்கானிக் பயிர் போன்றவை நல்ல தொழில்கள் தான். வங்கியில் கடன் வசதிகள் கூட எளிதில் பெற முடியும். தொழில் செய்து வருமானம் பார்க்க வேண்டும் என்கிற நியாயமான எண்ணமும், உழைப்பும் இருந்தாலே போதுமானது. (SUCCESS PROBABILITY அதிகம்), அவற்றில் தவிர்க்க இயலாத காரணங்களால் லாபம் இல்லை என்றாலும் கூட ஒரே இரவில் மொத்தமும் இழக்கும் வாய்ப்பு இல்லை. இதுதானே யதார்த்தமான அணுகுமுறை?

1 லட்ச ரூபாய் வேலையை விட்டு விவசாயம் செய்து, பண்ணை வைத்து மாதம் 10 வருமானம் பார்க்கும் ஐ.டி. ஊழியர். பத்திரிக்கை செய்தியோ, யூடியூப் தலைப்போ கடின உழைப்பாளிகள் மனதை சலனப்படுத்துவது இயல்புதான். உணச்சிவசப்படுகிறோமா, அல்லது உண்மையில் தொழிலதிபர் ஆக வேண்டிய நேரம் வந்துவிட்டதா என்பதை நிதானமாக ஆராய வேண்டும்.

முடிவாக ஒரு ஆரம்பம்

பணம் சம்பாதிக்க வேண்டும். வருமானத்தை அதிகப்படுத்த வேண்டும் என்னும் ஒவ்வொருவரின் பொதுவான நினைப்பும் ஆசையும் நியாயமானதே. ஆனால் தொடர் நஷ்டம் வரும்போதும், தொடர்ந்தை அதையே ஏன் மீண்டும் மீண்டும் கண்மூடித்தனமாக செய்ய வேண்டும்?

தொடர் நஷ்டமடையும் தொழிலை தொடர்ந்து செய்வது யதார்த்தத்தமான தொழிலுக்கும் ஆரோக்கியமான மனநிலைக்கும் முரண்பட்டது. போதைப் பழக்கம், மன நல பாதிப்பு. நம்மோடு சேர்ந்து நம் உற்றாரையும் பாதிக்கும் என்பதை உணர்வோம்.

தாய் தகப்பன்களைப் போல ஒரு சிலரே நாம் நிம்மதியாக வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அவர்களின் உணர்வுகளிக்கும் மதிப்பளித்து, லாப சாத்தியக் கூறு அதிகமுள்ள பல தொழில்களை அறிவுக்கண் கொண்டு செய்து பொருளீட்டுவோம்.

முடிவாக பணம் சம்பாதிப்பதுதான் முக்கியமே தவிர, ஆப்ஷனில்தான் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று தலைகீழாக மொட்டை மாடியிலிருந்து குதிப்பதை நிறுத்துவோம்.

கட்டுரை நீளம் கருதி முடிக்கிறேன். தொடர்ந்து பகிர்வோம்! தொழிலை லாபமாக செய்வோம். அல்லது யதார்த்தத்தில் லாபகரமான தொழிலை நோக்கி நகர்வோம். மேம்படுவோம்! நன்றிகள்.

No comments:

Post a Comment