ஒரு விஷயம், பொருள் அல்லது நபர் பற்றி முதலாவதாக நினைக்கும் எண்ணமானது அந்த குறிப்பிட்ட விஷயம் பொருள் அல்லது நபர் பற்றிய அடுத்தடுத்த சிந்தனைகளுக்கு இட்டுச் செல்கிறது. ஆகவே தான் முதன் முதலில் ஒரு விஷயத்தைப் பற்றி நினைக்கும்போது நேர்மறையாக நினைக்கிறோமா அல்லது எதிர்மறையாக நினைக்கிறோமா என்பதை அறிய சில நிமிடமாவது அவகாசம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு செய்வதன் மூலமாக ஒரு தவறான எண்ணத்தை அதன் ஆரம்ப கட்டத்திலேயே தடுத்து நிறுத்திவிட முடியும்.
இதுவே முதலில் நினைத்தவை நேர்மறையான எண்ணங்கள் என்கிற பட்சத்தில், அவற்றை தொடர்ந்து எண்ணுவதன் மூலம் அந்த ஒரு குறிப்பிட்ட விஷயம் தொடர்பான நேர்மறையான அதிர்வுகளை நம் சிந்தனையிலும் ஆழ்மனதிலும் பதிவு செய்ய முடியும்.
இந்த பதிவுகள் நமது வார்த்தைகள் மூலமாக வெளிப்பட்டு நமது செயல்களிலும் பிரதிபலிக்க தொடங்கும். இது நம்மை ஒரு சந்தோஷமான நேர்மறையான நபராக நம்மை சுற்றி இருப்பவர்களிடம் காண்பித்து சமுதாயத்தில் நமக்கு ஒரு மதிப்பினையும் நமக்கு தேவையான விஷயங்களை சாதித்துக் கொள்ளும் வாய்ப்புகளையும் பெற்றுத் தரும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
அது எப்படி, ஒன்றைப்பற்றி நினைக்கிற தருணத்தில் உடனே சிந்தனை வருகிறது. அந்த நொடியில் அதைப்போய் நாம் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்க முடியுமா? என்று தோன்றலாம்.
தற்போதைய தொழில்நுட்ப மற்றும் பரபரப்பான அவசரகதி கால ஓட்டத்தில், இந்த பயிற்சி சற்று சிரமமானதுதான். ஆனாலும் நம் வாழ்க்கையை மாற்றும் ஒரு பயிற்சியை நாம் வலுக்கட்டாயமாகவாவது மேற்கொண்டு தானே ஆகவேண்டும்?
தற்போதைய தொழில்நுட்ப மற்றும் பரபரப்பான அவசரகதி கால ஓட்டத்தில், இந்த பயிற்சி சற்று சிரமமானதுதான். ஆனாலும் நம் வாழ்க்கையை மாற்றும் ஒரு பயிற்சியை நாம் வலுக்கட்டாயமாகவாவது மேற்கொண்டு தானே ஆகவேண்டும்?
உண்மையில் சொல்லப் போனால் நாம் நமது சுய ரூபமான நேர்மறையான சந்தோஷமான மனநிலைக்கு செல்வதற்கு இவ்வளவு கடும் முயற்சியும் பயிற்சியும் செய்ய வேண்டி இருக்கிறது. அந்த அளவிற்கு மீடியா எதிர்மறையான எண்ணங்களை நமது ஆழ் மனதில் விதைக்கும் வேலையை மிகச் சிறப்பாக திட்டமிட்டு நடத்தி பணம் பார்த்துக் கொண்டிருக்கிறது. நமது சந்தோஷமான மனங்களையும் பதம் பார்த்துக் கொண்டிருக்கின்றது.
பல்வேறு திசைகளிலிருந்து, இவ்வாறாக புறப்பட்டு நம்மை நோக்கி ஒவ்வொரு கணமும் பாய்ந்த வண்ணமே இருக்கும் பல கோடி எதிர்மறை சிந்தனை அம்புகள் நம் மனதையும் மனநிலையையும் தாக்காமல் தற்காத்துக் கொள்ள வேண்டியது நமது கடமை தானே....?!
நம் சந்தோஷத்தை நாமே தீர்மானிக்க வேண்டும் என்றால், நாம் எதை பார்க்க வேண்டும், படிக்க வேண்டும், கேட்க வேண்டும், சிந்திக்க வேண்டும், செய்ய வேண்டும் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்.
இந்த பயிற்சிக்கு நமக்கு தேவையானது நமது மன சக்தி (willpower) மட்டுமே. அது நம் அனைவரிடமும் இருக்கிறது தானே...? ஒரு விளையாட்டாக சவாலாக கூட எடுத்துக் கொள்ளலாமே...!
ஒருமுறை சோதித்து பார்த்துக் கொள்வோம். கருத்துக்களை பகிர்ந்து கொள்வோம். நன்றி. !
அதிர்வுகளில் இணைந்திருப்போம்...! .
சிறு வீடியோ பதிவு : https://youtu.be/4RVwBeL0p-k
N.venkatesan.

No comments:
Post a Comment