பங்கு சந்தை என்பது ஒரு கடல். 💰அதில் எண்ணற்ற பிரிவுகளில் டிரேடிங் செய்து லாபமீட்டுவது சாத்தியம்.
டிரேடிங் பலவிதம்: 🕴
நம்மிடம் இருக்கும் முதலீட்டுக்கு (Capital) ஏற்ப, நமது லாப எதிர்பார்ப்புகளுக்கு (Profit) ஏற்ற, நஷ்டம் தாங்கும் திறனுக்கு ஏற்ப (Risk), பொறுத்திருக்க முடிந்த கால நேரத்திற்கு ஏற்ற (Trading Duration), உளவியலுக்கு ஏற்ற (Psychology) வகையிலான டிரேடிங்கை நாம் செய்து லாபம் ஈட்டலாம். இதை வேறு வகையிலும் சொல்வதுண்டு.
டிரேடிங் வகைகள்:
1. குறுகிய கால டிரேடிங் 2. நீண்டகாலம் (முதலீடு) 3. ஸ்கால்பிங் (அதிக மூலதனத்தில் 15 -20 நிமிடங்களுக்குள் வர்த்தகத்தை முடித்தல் 4. தின வர்த்தகம் (Intraday) - ஒரு நாளைக்குள் வர்த்தகத்தை முடித்துவிடுதல்.
இதில் எந்த வகையான டிரேடிங்கில் ஈடுபட்டாலும் அதில் லாபமீட்ட முடியும். அதற்குறிய முறையில் அவற்றை அணுக வேண்டும் என்பது மிக முக்கியம்.
வெற்றிகரமான டிரேடிங்கிற்கான விதிகள்:
👉உதாரணமாக. தின வர்த்தகம் (intraday) செய்ய வேண்டும் என்று முடிவு செய்து விட்டீர்கள் என்றால், பங்குகளில் செய்ய வேண்டுமா, அல்லது குறியீடுகளில் (ஆப்ஷன்) செய்ய வேண்டுமா? அல்லது பங்குகளின் ஆப்ஷனில் செய்ய வேண்டுமா என்பதை முதலில் முடிவு செய்து கொள்ள வேண்டும்.
👉அடுத்ததாக, எதைத் தேர்ந்தெடுத்தாலும், அது பற்றிய அடிப்படை (Fundamental) மற்றும் டெக்னிக்கல் (Technical) அனாலிஸிஸ் நன்றாக செய்து கொள்ள வேண்டும்.
👉உங்களுக்கு தெரிந்த விஷயங்களை ஒரு முறை பரிசோதித்துப் பார்த்துக் கொண்டாலே போதும்.
👉எந்த விலையில் entry ஆக வேண்டும், எந்த விலையில் வெளியேற வேண்டும், எந்த அளவு ஸ்டாப் லாஸ் வைக்க வேண்டும் என்பதை நன்றாக முடிவு செய்துவிட்டு பின்னரே டிரேடை எடுக்க வேண்டும்.
👉Take Profit வைக்கவும். அல்லது நேரமிருந்தால், குறிப்பிட்ட அளவு லாபம் வந்தவுடன் (0.25% அல்லது 0.5%) டிரேடை முடித்துக்கொள்ள வேண்டும். அல்லது ஸ்டாப் லாஸை லாபத்தில் வைத்துவிட்டு, Trailing செய்து கொண்டே செல்லலாம்.
👉Stop Loss ஆப் அல்லது சிஸ்டமில் போட்டு வைத்திருக்க வேண்டும். எந்த நிலையிலும் 2-4%-ற்கு மேல் இழப்பு எந்த ஒரு டிரேடிலும் அனுமதிக்க கூடாது. + ஒருமுறை வைத்த ஸ்டாப் லாஸை அதிகமாக இழப்பு ஏற்படும் படி மாற்றவே கூடாது.
👉3 மணிக்குள் Take profit வரவில்லை, அல்லது Stop loss -ற்கும் விலை செல்லை வில்லை என்றாலும் நிச்சயம் இருக்கும் விலையிலேயே டிரேடை முடித்துக் கொள்ள வேண்டும். (அடுத்த நாளைக்கு Carry forward செய்யவே கூடாது)
👉உங்களுக்கு லாபம் தரும் ஒரு குறிப்பிட்ட Strategy-யை தொடர்ந்து பயன்படுத்தி டிரேட் செய்து வரவும். சில நாட்கள் தொடர்ந்து ஸ்டாப் லாஸ் ஹிட் ஆனாலும் அதை மாற்ற வேண்டிய அவசியமில்லை. எல்லா கண்டிஷன்களும் ஒத்து போன பின்பே டிரேட் எடுக்கிறோமா என்பதை ஒன்றுக்கு இரண்டு முறை சரிபார்த்துக் கொள்ளவும்.
👉 உங்கள் Stragegy-க்கான எல்லா நிபந்தனைகளும் ஒத்து போகும் வரை காத்திருக்க வேண்டும். (அவசரப்பட்டு டிரேடிங்கில் இறங்க கூடாது)
👉 உங்கள் Strategy-க்கான நிபந்தனை ஒத்து போகவில்லை என்றால், அன்றைய தினம் டிரேடிங் வாய்ப்பு இல்லை என்று நினைத்து கம்ப்யூட்டர் அல்லது ஆப்-ஐ மூடிவிட்டு ரிலாக்ஸ் செய்துகொள்ளலாம். அடுத்த நாள் நமக்கே!
பல வகையான டிரேடிங் முறை பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம். சிறுக கட்டி பெருக வாழ்வோம்! தொடர்ந்து விவாதிப்போம். வளம் பெறுவோம். செல்வம் செழிக்க வாழ்த்துக்கள்.
ஆலோசனைக்கு mail venkatokk@gmail.com

No comments:
Post a Comment