Wednesday, September 27, 2023

பங்கு சந்தை ஆப்ஷன் டிரேடிங் (STOCK MARKET - OPTION TRADING) - ஓர் உளவியல் பார்வை: பகுதி - 3

ஆப்ஷன் டிரேடிங்கை வெற்றிகரமாக தொடர்ந்து செய்துபவர்கள் குறித்து மகிழ்ச்சி. வாழ்த்துக்கள். இது அவர்களுக்கான பதிவு அல்ல. தொடர் நட்டமும் எப்போதாவது சிறு லாபமும் பார்க்கிற, மொத்தத்தில் நட்டம், கோபம், வேதனையில் இருப்பவர்களுக்கான அடிப்படையான, ஆழமான, உளவியல் ரீதியான பதிவே இது.

இங்க ஜெஸ்ஸி ஜெஸ்ஸின்னு சொல்லுதா?

டிரேடிங் என்பதன் அர்த்தம் வியாபாரம். இது ஒரு பொதுவான வார்த்தை.

உலகத்துல எத்தனையோ டிரேடிங் இருந்தும் நான் ஏன் ஸ்டாக் டிரேடிங்க்கு வந்தேன் தெரியுமா? என்று பங்குகளை வாங்கி, சில காலம் வைத்து விற்கும் வர்த்தகத்தில் இருப்பவர்கள் புத்திசாலிகள். (SWING, SHORT TERM, LONG TERM STOCK TRADING. NOT STOCK / INDEX OPTION).

எத்தனையோ ஸ்டாக்ஸ் இருந்தும் நான் ஏன் STRATEGICAL OPTION SELLING தொழிலுக்கு வந்தேன் தெரியுமா என்றால், இவர்களும் புத்திசாலிகள். (முதலீடு 15 முதல் 30+ லட்சம்)

டிரேடிங் அடிப்படைப் புரிதல்

மேற் சொன்ன இரு வகை வர்த்தகர்களுக்குமான லாஜிக்கைப் புரிந்து கொள்ள முயற்சிப்போம்.

நேரம் மிகவும் மதிப்பு வாய்ந்தது. ஒவ்வொரு மணித்துளியும் ஒன்று பணம் ஈட்ட வேண்டும்.

தனது படிப்பு அல்லது திறமையை வைத்து ஒரு கம்பெனியில் வேலை செய்யலாம். அல்லது முதல் கணிசமாக (அதிகம்) வைத்து வியாபாரம் (PREMIUM BUSINESS) தொழிலை செய்யலாம். லாபம் குறைவாக வந்தாலும் தொடர்ச்சியான வருவாய் (CONSISTENT INCOME) சாத்தியம். சிறு நட்டங்கள் பெரிதாக பாதிக்காது.

தொழில் செய்வோர் பின்னணி

எனக்கு ரியல் எஸ்டேட் தொழிலில் வருமானம், கட்டிடம், கடை, வ்வீட்டு வாடகை வருகிறது, முதலீடுகளிலிருந்து போனஸ், வங்கி சேமிப்பு, தங்கம் கையிருப்பு, அந்த வகையில் இன்னொரு பிசினஸ் OPTION SELLING. எல்லாவற்றிற்கும் அதனதன் முதலீட்டு தொகையைப் பொறுத்து மாதாமாதம் ஒரு நிலையான தொகை வருமானமாக வந்து கொண்டிருக்கும். அதே போன்றுதான் OPTION SELLING-லிருந்தும் வர வேண்டும் என்று நினைப்பது.

தினம் தினம், நொடிக்கு நொடி MTM பார்த்து, குடும்பத்தார், பொழுதுபோக்கு, நண்பர்களை விட்டு தள்ளி இருந்து, உலக பொருளாதார நிகழ்வுகளை கவனித்துக் கொண்டு, தூக்கம் தொலைத்து வர்த்தகம் செய்ய வேண்டிய அவசியமில்லை. அப்படி ஒரு வர்த்தகம் அல்ல, எந்த வேலை செய்தாலும் அது அர்த்தமற்றது. முட்டாள்தனம்.  

கணித்த திசைக்கு எதிராக மார்க்கெட் போனால் ADJUSTMENT STRAGEGY ஆர்டர் செய்துவிட்டு அமைதியாக இருப்பது. (மாத இறுதியில் அல்லது எதிர்பார்த்த சதவீத லாபம் வந்ததும் வெளியேறுவது.) பெரும் தொழில் அதிபர்களின் பாதையிலேயே பயணிக்கிறோம் என்கிற நம்பிக்கையே பலம்.

ஆப்ஷன் பையர்களின் மனநிலை

ஆபீஸில் MANAGER / TEAM LEAD PRESSURE, POLITICS, கைகட்டி பதில் சொல்ல புடிக்கவில்லை. கோபமாக அவர்களை கெட்ட வார்த்தையில் திட்டி, வேலையை விட்டுட்டு டிரேடிங் பண்ணி சுதந்திரமா இருந்துக்கலாம் என உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுப்பது. அல்லது கடன் வாங்கி டிரேடிங் பண்ணி கோடீஸ்வரனாக முடிவெடுப்பது.

LOGICAL & SUCCUESSFUL JOB SCENARIO

வேலைக்கு செல்லும் முன்பு, குறைந்தது (12 வருட பள்ளி படிப்பு + 3/4 வருட கல்லூரி படிப்பு) 15 வருட படிப்பிற்கு பின்பு, அது தொடர்புடைய ஒரு வேலையில் சேர்கிறோம். 5 வருடங்கள் பணி புரிந்த பின்புதான் மாதம் 1 லட்சம் சம்பளத்தை எட்டிப் பார்க்க முடிகிறது. அதுவும் பெரிய கம்பெனியாகவும், நாமும் பெரும் திறமைசாலியாகவும் இருந்தால் மட்டுமே.  

மாத சம்பளம் 20 ஆயிரமோ, 1 லட்சத்திற்கும் மேலோ, எந்த கம்பெனியில் எந்த நிலையில் வேலை செய்தாலும் (EMPLOYEE) நமது நேரம், உடலுழைப்பு, அறிவை முதலாளிகளுக்கு கொடுத்துதான் பொருளீட்ட முடியும். (LOGIC). 12 வருட உழைப்பு, படிப்பு, ஒழுக்கம், பயிற்சி, பொறுமையின் விளைவுதான் நமது மாத சம்பளம் மற்றும் LIFE STYLE.

இன்று நமது மனைவி, குழந்தைகள், குடும்ப பராமரிப்பு, வாகனம், உடை, ருசியான உணவு, சுற்றுலா, பொழுதுபோக்கு, பிற அனுபவங்கள் அனைத்தையும் கொடுத்திருப்பதும் நமது 12 வருட படிப்பு, பொறுமை, ஒழுக்கம்தான்.

ஒரு நிறுவனத்தில் வேலை செய்து, குடும்பத்தை பராமரிப்பது ஒரு சாதனை. வேலையை நேசிப்பதை விடுத்து, அதன் மேல் ஏன் வெறுப்பு?

சாத்தியமான வளர்ச்சிப் பாதைகள்

முதலில் நாம் செய்து கொண்டிருக்கும் தொழில் அல்லது வேலையில் நிச்சயமாக முன்னேறுவதற்கான சாத்தியக்கூறுகள் என்னென்ன என யோசிக்கலாம்.

நாம் செய்யும் வேலையிலேயே அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கான திறமைகளை வளர்த்துக் கொள்ளலாம். (HIGHER STUDIES, ADDITIONAL SKILL DEVELOPMENT, SHIFTING TO GOOD COMPANY ETC)

நாம் வேலையையே ஒரு தொழிலாக மாற்றி செய்வதற்கான வாய்ப்பு குறித்து யோசிக்கலாம். (DATA ENTRY OPERATOR TO DTP SHOP, HOTEL COOK JOB TO SMALL TIFFIN CENTER OR HOME MESS, NURSING JOB TO NURSING AGENCY ETC) உண்மையில் வளர்ச்சி பற்றி இப்படி நாம் ஆரோக்கியமாக யோசிக்கிறோமா?

நிலையான, அமைதியான, வசதியான வாழ்க்கையை வழங்கும் வேலையை உதறித்தள்ளி, FULL TIME TRADING-ல் வாழ்க்கையை முன்பு இருந்ததைவிட சிறப்பாக தொடர்ந்து நிர்வகிக்க முடிந்தால் சிறப்பு.

ஆனால் நிலைமை மோசமாக இருக்கும்போது, அடிப்படையான விஷயங்களை யோசிக்க வேண்டியது அவசியம்.

வேலையை சுரண்டல் என்று நினைப்பதும், சுதந்திர விரும்பியாக நினைப்பதும் அவரவர் தனிப்பட்ட கருத்துதான். உணர்ச்சிவசப்பட்டு தொழில் ஆரம்பிப்பதற்கும், பாதுகாப்பான திட்டமிடலோடு, அறிவோடு தொழில் தொடங்குவதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.

பண்ணைத் தொழில், விவசாயம், ஆர்கானிக் பயிர் போன்றவை நல்ல தொழில்கள் தான். வங்கியில் கடன் வசதிகள் கூட எளிதில் பெற முடியும். தொழில் செய்து வருமானம் பார்க்க வேண்டும் என்கிற நியாயமான எண்ணமும், உழைப்பும் இருந்தாலே போதுமானது. (SUCCESS PROBABILITY அதிகம்), அவற்றில் தவிர்க்க இயலாத காரணங்களால் லாபம் இல்லை என்றாலும் கூட ஒரே இரவில் மொத்தமும் இழக்கும் வாய்ப்பு இல்லை. இதுதானே யதார்த்தமான அணுகுமுறை?

1 லட்ச ரூபாய் வேலையை விட்டு விவசாயம் செய்து, பண்ணை வைத்து மாதம் 10 வருமானம் பார்க்கும் ஐ.டி. ஊழியர். பத்திரிக்கை செய்தியோ, யூடியூப் தலைப்போ கடின உழைப்பாளிகள் மனதை சலனப்படுத்துவது இயல்புதான். உணச்சிவசப்படுகிறோமா, அல்லது உண்மையில் தொழிலதிபர் ஆக வேண்டிய நேரம் வந்துவிட்டதா என்பதை நிதானமாக ஆராய வேண்டும்.

முடிவாக ஒரு ஆரம்பம்

பணம் சம்பாதிக்க வேண்டும். வருமானத்தை அதிகப்படுத்த வேண்டும் என்னும் ஒவ்வொருவரின் பொதுவான நினைப்பும் ஆசையும் நியாயமானதே. ஆனால் தொடர் நஷ்டம் வரும்போதும், தொடர்ந்தை அதையே ஏன் மீண்டும் மீண்டும் கண்மூடித்தனமாக செய்ய வேண்டும்?

தொடர் நஷ்டமடையும் தொழிலை தொடர்ந்து செய்வது யதார்த்தத்தமான தொழிலுக்கும் ஆரோக்கியமான மனநிலைக்கும் முரண்பட்டது. போதைப் பழக்கம், மன நல பாதிப்பு. நம்மோடு சேர்ந்து நம் உற்றாரையும் பாதிக்கும் என்பதை உணர்வோம்.

தாய் தகப்பன்களைப் போல ஒரு சிலரே நாம் நிம்மதியாக வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அவர்களின் உணர்வுகளிக்கும் மதிப்பளித்து, லாப சாத்தியக் கூறு அதிகமுள்ள பல தொழில்களை அறிவுக்கண் கொண்டு செய்து பொருளீட்டுவோம்.

முடிவாக பணம் சம்பாதிப்பதுதான் முக்கியமே தவிர, ஆப்ஷனில்தான் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று தலைகீழாக மொட்டை மாடியிலிருந்து குதிப்பதை நிறுத்துவோம்.

கட்டுரை நீளம் கருதி முடிக்கிறேன். தொடர்ந்து பகிர்வோம்! தொழிலை லாபமாக செய்வோம். அல்லது யதார்த்தத்தில் லாபகரமான தொழிலை நோக்கி நகர்வோம். மேம்படுவோம்! நன்றிகள்.

Saturday, September 2, 2023

பங்கு சந்தை ஆப்ஷன் டிரேடிங் (STOCK MARKET - OPTION TRADING) - ஓர் உளவியல் பார்வை: பகுதி - 2

ஆப்ஷன் டிரேடிங்கை உண்மையில் வெற்றிகரமாக தொடர்ந்து செய்து வருபவர்கள் குறித்து மிகுந்த மகிழ்ச்சி. வாழ்த்துக்கள். இது அவர்களுக்கான பதிவு அல்ல. இது ஒரு பரந்த, பொதுவான, சக்திவாய்ந்த, அகன்ற, ஆழமான, உளவியல் ரீதியான, சுவாரஸ்யமான பதிவு. 

ஆப்ஷன் டிரேடில் தொடர் நஷ்டமடைபவர்களின் மனநிலையை மெல்ல வெற்றிகரமான ஆப்ஷன் டிரேடர்களாக அல்லது நீண்டகால முதலீட்டாளராவது நோக்கி திருப்பும் ஒரு பெரும் முயற்சியின் சிறு துளிதான் இப்பதிவு.

ஆப்ஷன் பையிங் (LOW PREMIUM OPTIONS) அலப்பறைகள்:

காட்சி 1:

நிஃப்டியில் SWING TRADE-இல் POSITIONAL-ஆக ஒரு மாதம் 700 முதல் 1000 பாயிண்ட்ஸ் நிஃப்டியில் அசால்டாக பிடிக்கலாம் இந்த OPTION BUYING STRATEGY மூலம் என்று சொல்வார்கள். முடிந்து போன சார்ட்டை காட்டி, INDICATORS போட்டு, இங்க வாங்கி, இங்க வித்திருந்தா ஆழ்வார்பேட்டையில வீடு வாங்கி இருக்கலாம் என்று சொல்லாத குறையாக அவர்களின் புதிய கண்டுபிடிப்பு ஸ்ட்ராட்டஜியை விவரிப்பார்கள். 

(இடையிடையே தயவு செஞ்சு சப்ஸ்கிரைப், தயவு செஞ்சு வீடியோ ஸ்கிப் பண்ணாம பாருங்க என பல முறை கெஞ்சுவார்கள். அவர்கள் விற்கும் பொருட்களையும் வாங்க சொல்வார்கள்)

STOP LOSS வெறும் 250 முதல் 300 POINTS தான் என்பார்கள். (அது 12500 முதல் 15000 ரூபாய்). அவர்களின் வெறும் SL நம்மவர்களின் ஒரு மாத வீட்டு வாடகையாக இருக்கலாம்.

ஒரு சில நாட்களில் மார்க்கெட் எதிர் திசையில் சென்று MTM சில ஆயிரங்களை கபளீகரம் செய்து ரத்தம் கக்கிக் கொண்டிருக்கும்போது, மனம் தாங்காமல் ஓடிச் சென்று FB, WHATSAPP, INSTA குரூப்பில் கருத்து கேட்போம். அங்கிருந்து நக்கலான கமெண்ட்கள் வந்து விழும்.

EXPIRY DAY அன்று மார்கெட் நாம் முன்கணித்த எண்ணுக்கோ அதைவிட அதிகமாகவோ சென்றிருந்தாலும் கூட நமது பிரீமியம் (0 ஆகாமல்) 40 பைசா ஆகும். தைரியம் இருந்தால் SL ஹிட் ஆகும் வரை காத்திருப்போம். அல்லது வலி தாங்க முடியாமல் நாமே வெளியேறி விடுவோம். (பிறகு வழக்கம் போல மார்கெட் TARGET நோக்கி புயல் வேகத்தில் செல்லும். இது ஒரு தொடர்கதை)  

காட்சி 2:

இந்த ONE MINUTE SCALPING STRATEGY உங்க வாழ்க்கையை மாற்றும் என்பார்கள். ஆம், நாம் தினமும் 30-50 டிரேட் செய்தால், அது நிச்சயம் புரோக்கர்களின் வாழ்க்கையை மாற்றும்.

SCALPER-ன் மனநிலையில் SCALP TRADING ஏற்படுத்தும் மன நல பாதிப்பு அதிகம். POSITIONAL-ல் நிறைய இழந்து, INTRA DAY TRADING வில் இறங்கி, டார்கெட் அல்லது SL வரை காத்திருக்கும் மன திடம் இன்றி, பயம் மற்றும் பதற்றத்தில் MTM பச்சையாக இருக்கும்போதே உடன் வெளியேறி ஜாக்பாட்டை பல நாட்கள் மிஸ் செய்து, SL போடாமல் அக்கவுண்ட் பேலன்ஸை ஒரே நாளில் இழந்து, பின் அவர் SCALPING-ற்கு வந்து இருக்கலாம்.

SCALPING என்பது அதிக லாட்களில் 1-5 புள்ளி லாபத்தையோ, 10 புள்ளி நட்டத்தையோ, அதிவேகத்தில், அதிகமுறை புக் செய்யும் வியாபாரம் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன் மக்களே.

SCALPING-ற்கு உண்டான உண்மையான மனநிலையோடுதான் நாம் டிரேட் செய்கிறோமா என்பதை நமக்கு நாமே கேட்டுக் கொள்ள வேண்டும்.

காட்சி 3:

அடுத்து HERO OR ZERO TRADE-ல் ஒரு கை பார்க்கலாம் என்று இறங்குவோம்.  கம்மி விலையில் வாங்கி கொள்ளை லாபம். (அல்லது பூஜ்ஜியம்). SL போட்டு வெளியேற கூடாது. இது விளையாட்டின் விதியாம். மாதத்தின் 4 EXPIRYயில் ஒரு EXPIRY-யில் ஹீரோ ஆனால் கூட மொத்த நட்டத்தையும் சரி செய்துவிடலாம் என்பார்கள். அப்படி பார்த்தால் கூட ஒரு INDEX-ஐ மட்டும் பின்பற்றி EXPIRY TRADE பண்ணுவோமா நாம்? மாட்டோம்.

சராசரியாக மாதம் BANK NIFY-க்கு 4 EXPIRY, NIFTY-க்கு 4 EXPIRY, FIN NIFTY-க்கு 4 EXPIRY, SENSEX 4 EXPIRY... போதும் போதும்... தினம் தோறும் எக்ஸ்பயரிதான்... (சிரங்கு வந்த கை சும்மாவா இருக்கும்னு ஊர்ல பழமொழி சொல்வாங்க?)

ஆப்ஷன் பையர்களின் புரிதல் நிலை:

என்னாடா இது! இண்ட்ராடே பண்ணாலும் பணம் போவுது. சாந்தி சாந்தி என தியானம் எல்லாம் கற்றுக் கொண்டு செய்து POSITIONAL OPTION TRADE பண்ணினாலும் பணம் போகுது, இது SIDEWAYS MARKET போல இருக்கு என்று SCALPING-ம் பண்ணி பார்த்தாச்சு. என்ன மாதிரி டிசைன்டா இது? என நொந்து கொள்வோம்.

மார்கெட்டை ஒரு கை பார்க்காம விடுவோமா? நாம யாரு..!? நம்மகிட்டயேவா!

தெரிந்தவர், அல்லது யுடியூப் அனலிஸ்ட் புலிகளிடம் கேட்போம். ஆப்ஷன் பையிங்கில் TIME DECAY... இது THETA பண்ற வேலை. காமா தெரியுமா? என்று அசால்டாக கேட்பார்.

அது தெரியாததால் தான் இவ்வளவு நாள் பணத்தை இழந்தோம் என ஷேமாக உணர்ந்த நாம்.

அப்புறம் என்ன? ஓ, நமக்கு இன்னும் அந்த டிரிக் கைவரவில்லை போல இருக்கு. நாம ஏன் ஒரு அனலிஸ்ட் புலியிடம் ஆப்ஷன் பையிங் ஸ்ட்ராட்டஜி கற்றுக் கொள்ள கூடாது? என்று மீண்டும் ஒரு குருநாதரை தேடி ஓடி பணம் கட்டி, ஸ்ட்ராட்டஜி கற்றுக் கொள்வோம்.

எங்க குரூப்பில் சேருங்க, லிங்க் கிளிக் பண்ணி டீமேட் அக்கவுண்ட் ஓப்பன் பண்ணுங்க, 10, 20, 30 ஆயிரம் கட்டி கோர்ஸ் வாங்க சொல்வார்கள். மீண்டும் அன்னிக்கு சூரியன் உதிச்சுதா. கோழி கொக்கரக்கோன்னு கூவிச்சா...!

மீண்டும் டிரேடிங்கில் குதிப்போம். ஆனால் ரிசல்ட் அதேதான்.

காரணம் கேட்டால், நம்மளை ஒழுக்கமாக டிரேட் செய்யவில்லை. சைக்காலஜி சரியில்லை என்பார். பைத்தியம் என்று நேரடியாக சொல்லாத குறையாக சொல்வார். ஏற்கெனவே நஷ்டமான நாம், மீண்டும் பணம் கட்டி கோர்ஸ் படித்து, பணம் கட்டி டிப்ஸ் வாங்கி, பணம் வைத்து டிரேட் பண்ணி, மீண்டும் நஷ்டமாகி மனம் நொந்த நிலையில், நானா உன்ன கையை பிடிச்சு இழுத்தேன்..? என்று நம்மையே திட்டுவார்கள். (வேறு ஒரு குருவை அல்லது புதிய ஸ்ட்ராட்டஜியை தேடியும் மனம் ஓட நினைக்கும்)

இதெல்லாம் புத்திசாலித்தனமான, லாஜிக்கலான, யதார்த்தத்திற்கு ஒத்து வரும் வியாபாரமா? இப்படி எல்லாம் வழிகாட்டுறேன் பேர்வழி என அனலிஸ்ட் புலிகள் செய்வது சரியா? இதை நாம்தான் நமது டிரேடிங் முடிவிலிருந்து நடுநிலையோடு யோசிக்க வேண்டும்.

உளவியல் அணுகுமுறை:

ஆசைகாட்டி ஏமாற்றுபவர்களை நாம் ஒன்றும் பண்ண முடியாது. ஆனால் அவர்கள் விரிக்கும் வலையில் சபலப்பட்டு விழாமல் நம்மை நாம் கட்டுப் படுத்திக் கொள்ளlலாம். அது நம் கையில். 

எப்படியாவது இழந்த பணத்தை மீட்க வேண்டும் என்று எமோஷனலாகி, மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே அல்ல, அதைவிட பெரும் பள்ளத்தில் விழுவோம். இழந்த பணத்தை எடுக்க நினைப்பது தவறல்ல. சரியானதுதான். அப்படி நினைக்கவில்லை என்றால்தான் மனக்கோளாறு. 

இழந்த பணத்தை மீட்க வேண்டும் என்பது தான் முக்கியமே தவிர, பலமுறை நட்டத்தை சந்தித்த அதே வழியில்தான் அதை மீட்க வேண்டும் என்பதில் லாஜிக் இல்லை. 

ஆனால், CHEAP OPTION BUYING-ல் விட்ட பணத்தை, அதே CHEAP OPTION BUYING இல் பிடித்து, கோடீஸ்வரனாக நினைப்பதுதான் நடைமுறைக்கு ஒவ்வாதது.

அப்படி ஆக முடிந்தால், பிறகு ஏன் கம்மிவிலை ஆப்ஷன் பையிங் ஸ்ட்ராட்டஜியை, சாஃப்ட்வேரை நம்மிடம் அதிக விலைக்கு கூவி விற்கிறார்கள்? அவர்கள் டெக்னிக்கை அவர்களே பயன்படுத்தி அமைதியாக கோடிகளை அள்ளலாமே! மக்களை கோடீஸ்வரனாக்கும் சேவையை இலவசமாக செய்யலாமே என்றால், நான் உன் கையை பிடித்து இழுக்கவில்லை. செபியில் பதிவு செய்யவில்லை. இது என் தொழில், DISCLAIMER பாருன்னு... பம்மிடுவாங்கோ! 

இன்று வரை பல வெற்றியாளர்கள், பிரபலங்கள், கோடீஸ்வரர்கள், சூப்பர் ஸ்டார்கள் சமுதாயத்திற்கு ஆற்றி வரும் ”சேவையை” நாம் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம்.  

CHEAP OPTION BUYING, விட்டதை பிடிக்கிறேன் பாரு என்கிற மனநிலை நமது பலவீனம் என்பதை உணர்வோம். இல்லை என்றால், அது அனலிஸ்ட் புலிகளுக்கு பலமாகி பணமாகிவிடுவதை தவிர்க்க முடியாது.

சிறிய, வலிமையான ட்ரிக்ஸ்:

RETAIL INTRADAY, POSITIONAL CHEAP RATE OPTION BUYER களின் EMOTIONAL WEAKNESS.-ஐ கொத்தாகப் பயன்படுத்தி BIG SHOTS விளையாடும் விளையாட்டு என்கிற எதார்த்ததை, உணரும் நாள் முதல் நமது நட்டம் நிறுத்தப்படும். அதுவே முதல் லாபம்.  

ஏற்கெனவே கடன், மாதாந்தர EMI, கமிட்மெண்ட், வட்டி செலவுகள் என ஓடிக் கொண்டு இருப்பவர்கள் நிறுத்தி யோசித்து அதையே தொடராமல் இருக்க வேண்டிய நேரம் இது. ஏனெனில் கோவிட்டுக்கு பிந்தைய உலக நாடுகளின் பொருளாதார நிலையின் அளவுகோள் (GLOBAL ECONOMICS) சொல்லும் வலுவான முடிவுகள் அப்படி.

CHEAP OPTION BUYING செய்யாத ஒவ்வொரு நாளும் நாம் தினசரி 10,000 ரூபாய் ஜாக்பாட் அடித்ததற்கு சமம் என்ற உண்மையை மீண்டும் மீண்டும் நமக்குள் உறுதியாக சொல்லிக் கொள்வோம்.

ஆப்ஷன் பையிங் அடிமைத்தனத்திலிருந்து விடுபட, STOCK-ல் SWING TRADE, SHORT TERM என அளவாக செய்யலாம். உணர்ச்சிவசத்தை கட்டுப்படுத்தலாம்.

அக்கவுண்ட்டில், டீமேட் கணக்கில் உபரியாக ஆப்ஷனில் ஆடி விட வைத்திருக்கும் பணத்தை மொபைல் பேங்கிங் இல்லாத ஒரு அக்கவுண்ட் இல் வங்கிக்கு சென்று பணத்தை போட்டுவிட்டு வரலாம்.

அல்லது அந்த பணத்தில் உடனே மனைவிக்கோ, அம்மா, அப்பாவுக்கோ ஏதோ ஒரு தங்க நகையை சர்ப்ரைஸாக வாங்கி தரலாம். குழந்தைக்கு BRANDED DRESS, SHOE ஒன்று சர்ப்ரைஸ் கிஃப்ட் செய்யலாம். உறவுகளுக்காக செய்த செலவு என்றுமே அபரிமிதமான லாபம் தான். (உறவும் பலப்படும். தங்கமும் அவசரத்துக்கு உதவும். ஒரே கல்லில்...)

குறிப்பு: இது ஆப்ஷன் டிரேடிங்கிற்கு எதிரான பதிவல்ல. அல்ல. உபரி பணத்தை ஆப்ஷனில்தான் விட்டுப் பார்க்கிறேன் பாதிப்பில்லை என்றால், ENJOY. கம்மிவிலை ஆப்ஷன் பையிங் தினசரி வர்த்தகத்தை லாபகரமாக செய்து வரும் அனைத்து டிரேடர் பெருமக்களுக்கும் வாழ்த்துக்கள்! "அறிவின் விரிவே நமது நிரந்தர செல்வம்!" 

கட்டுரை நீளம் கருதி இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். தொடர்ந்து பகிர்வோம், உங்கள் ஆதரவோடு! பயமின்றி, நிம்மதியாக, அறிவார்ந்த முறையில் பொருளாதார வளம் பெறுவோம்! நன்றிகள்! N. வெங்கடேசன்