Tuesday, August 1, 2023

பங்கு சந்தை வர்த்தகம் (STOCK MARKET - TRADING) - ஓர் உளவியல் பார்வை (பகுதி-1)

(இந்த ஒரு STRATEGY போதும், இனி நீங்க கோடீஸ்வரர்தான்)

பங்குசந்தை:

பங்குசந்தை என்றாலே பொதுவாக ”ஒன்னு வச்சா, ரெண்டு, ரெண்டு வச்சா நாலு, நாலு வச்சா எட்டு” (QUICK MONEY EARNING, BECOME RICH QUICKLY) என்ற மனோபாவத்துடன் பார்ப்பவர்களும், புரிந்துகொள்பவர்களும், அணுகுபவர்களும், உள்நுழைந்து பணமிழந்து வேதனைப்படுபவர்களுமே அதிகம். பங்கு வர்த்தகம் பற்றிய சரியான புரிதல் இன்மை காரணம் என்பது எந்த அளவிற்கு உண்மையோ, அதை விட தன்னைப் பற்றிய புரிதல் இன்மை (SELF AWARE) என்பதே மிக மிக முக்கியமான கருத்து.

சில ஆயிரம் முதல், பல லட்சங்கள் வரை பணத்தை ஆப்ஷன் டிரேடிங்கில் (CHEAP, NACKED OPTION BUYING / TRADING) இழந்த பின்பும், இன்னும் ஒரு டிரேடில் எனது மொத்த நஷ்டத்தையும் ஈடுகட்டி, அதைவிட அதிக லாபம் பார்த்துவிடுவேன் என்கிற அதி தீவிரமான, சாத்தியமில்லாத, நடைமுறையை ஏற்றுக்கொள்ள இயலாத மனநிலையில் பல்லாயிரம் பேர் செயல்படுவதை ஒருவித மனநோய் (MENTAL PROBLEM) என்றே கூறலாம். தன்னை மாற்றிக்கொண்டு நிம்மதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்கிற எண்ணம் ஆழ்மனதில் இருந்தால், நிச்சயம் உதவிகள் கிடைக்கும். மாற முடியும்.

ஆனால், ”இந்த ஒரு டிரேட் என் வாழ்க்கையையே மாற்றிடும்” என்கிற எண்ணமே 99.99% டிரேடர்களின் மனங்களை உடைத்து மீளாத் துயர் வலையில் சிக்க வைக்கிறது. என்ன செய்யலாம்?

1. நோக்கத்தில் தெளிவு (CLEAR AIM)

”நமது அளவுகோள்படி, நாம் பணக்காரர் ஆகவேண்டும்” என்பதுதான் ஒவ்வொருவரின் ஆசை, கனவு, லட்சியம்,  வெறி. இதுவே அடிப்படை உண்மை. ஆனால், இந்த வழியில்தான் பணக்காரர் ஆக வேண்டும் என்கிற குறுகிய மனப்பான்மையில், எந்த வித புரிதலும் இன்றி, உணர்ச்சிவசப்பட்டு (EMOTIONAL) தனக்கு பொருத்தமில்லாத ஒரு துறையிலேயே மீண்டும் மீண்டும் ஈடுபட்டு, உடல், மன ஆரோக்கியம், சக்தி, உறவுகள், நட்புகள், செல்வம் மற்றும் மிக முக்கியமாக நேரத்தை இழப்பது வீண். ”தனக்கு எது ஒத்துவராது” என்பதை அறிந்து, அதில் ஈடுபடாதவர் நிச்சயம் லட்சியத்தை எட்ட முடியும்.

2. தொழில்கள் ஆயிரம் (LOTS OF BUSINESSES)

சினிமா, ரேஸ், ரம்மி, மலிவு விலை OPTION BUYING இன்னும் பல அடிப்படை விதிகளுக்கே பொருந்தாத, வெற்றி வாய்ப்பு மிகவும் குறைவாக உள்ள தொழில்களில் ஈடுபடுவதன் மூலமாகத்தான் கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்று நினைப்பது அறியாமை. தலைகீழாகத்தான் குதிப்பேன் என்றால் மேற்சொன்ன துறைகளில் வெற்றி பெறும் 10% பேர்களின் ஃபார்முலாவை CRACK செய்து, அவர்களின் உலகமகா பொறுமையோடு உங்களால், உணர்வுகளை கட்டுப்படுத்தி செயல்பட முடிந்தால் சபாஷ். முடியாது என்றால் RISK AND TENSION குறைவான, SIP, BONDS, GOLD, SHORT TERM, LONG TERM, INVESTMENT உடன் நிறுத்திக்கொள்வது புத்திசாலித்தனம். மனதை தனக்கு தெரிந்த, வெற்றி வாய்ப்பு அதிகமுள்ள தொழிலை நோக்கி மாற்றிக் கொள்வது அதி புத்திசாலித்தனம்.

உலகில் பல வேலைகள் மற்றும் தொழில்கள் உள்ளன. வங்கியில் வேலை செய்பவர்களும், தனியார், அரசு நிறுவனங்களில் வேலை செய்பவர்களும், பெட்டிக் கடை முதல் பல வகைப்பட்ட சிறு, குறு, நடுத்தர வியாபாரம் செய்பவர்களும் இன்ன பிற சேவைகள் செய்பவர்களும் செல்வந்தர்கள் ஆன வரலாறு மிக மிக அதிகம். ஒரு தொழில் நொடித்து போனாலும், சுதாரித்து அதன் காரணங்களைக் கண்டறிந்து, சில காலத்திற்கு பின் மீண்டும் CALCULATED RISK மூலம் அதே தொழிலை சிறிது வடிவம் மாற்றி செய்து, பெரும் வெற்றி பெற்றவர்களும் ஏராளம். அக்கம் பக்கம் கேட்டாலே, பல உதாரணங்கள் கிடைக்கும்.

OPTION BUYER-களின் குறுகிய பார்வையால் ”பல பொன்னான தொழில்களும், வேலைகளும் தூங்குதப்பா”

3. வேறுபட்ட பார்வை: (DIFFERENT PERSPECTIVE)

ஒரு டாக்டர் காலை 3 மணி நேரம், மாலை 3 மணி நேரம் வேலை பார்க்கிறார். 5 நிமிட கன்சல்டிங்கிற்கு 500 ரூபாய் வசூலிக்கிறார். காலை மாலை சராசரியாக 10+10=20 நோயாளிகளைப் பார்த்தால், ஒரு நாளைக்கு 10 ஆயிரம் ரூபாய் வருமானம். (6 மணி நேர உழைப்பு). மாதம் 3 லட்சம். வருடம் 36 லட்சம். டாக்டருக்கு படிக்க 1 கோடி செலவு செய்திருந்தால், தோராயமாக 4 வருடங்களில் போட்ட முதலை எடுக்கிறார். ஐந்தாம் வருடத்திலிருந்தே லாபம் பார்க்க ஆரம்பிக்கிறார். (இங்கு நான் சொல்வது எந்த அப்டேட்டும் செய்து கொள்ளாத, சராசரிக்கும் கீழான மருத்துவரையும், அவரது சராசரி & குறைந்தபட்ச வருவாயையுமே)

5 வருடத்தில் இந்த நிலையை அடைய, அவர் மட்டுமல்ல, அவர் குடும்பத்தாரே அவருக்கு ஒத்துழைப்பு செய்து, அவரை 5 ஆண்டுகள் மருத்துவம் படிக்க வைத்து, அவரை சப்போர்ட் செய்திருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

TRADING IS A PROFESSION  என்று சொல்பவர்களில் பெரும்பாண்மை புரோக்கர்களாகவோ, அல்லது அட்வைஸர்களாகவோ அல்லது ஏதேனும் ஒரு வியாபார உள் நோக்கம் கொண்டவர்களாகவோதான் இருப்பார்கள். நமது நலனில் அக்கறை கொண்டவர்கள் நம் குடும்பத்தாரும், நாமும்தான். இங்கு ஒருவருடைய வாழ்க்கை போன்று வேறு எவருடைய வாழ்க்கையும் இருக்காது.

ஆனால் வாழ்க்கை ஒன்றே ஒன்றுதான். ஒரே முறைதான். இப்படிப்பட்ட மன உளைச்சல்களுக்கு மத்தியில் எப்போதாவது பார்க்கும் லாபமும் எப்பவுமே கிடைக்கும் நஷ்டமும் தேவையா என்பதை புரிந்து செயல்பட வேண்டியதும், செயல்படாமல் தவிர்ப்பதும் அவசியம்.

பணம் செலவழித்து, பல டெக்னிக்கல் கோர்ஸ்களை கற்றபின்பும், அடுத்து நாம தெரிஞ்சுக்க போற STRATEGY தான் நம்மை கோடீஸ்வரனாக்கும் என்று நம்பும் அப்பாவி டிரேடர்களும், அடுத்து நாம டிசைன் பண்ணி விற்க போகிற STRATEGY-தான் நம்மை கோடீஸ்வரனாக்கும் என்கிற அனலிஸ்டுகள் மற்றும் புரோக்கர்களும் மாறி மாறி அடித்துக் கொள்ளும் தளம் கீழ் நிலையில்தான். 

மக்களிடம் புரிதல் ஏற்பட்டுவிட்டால், இங்கு எவரும் எவரிடமும் பணம் இழக்க வேண்டிய, மனம் வேதனைப்பட வேண்டிய அவசியமில்லை என்னும் புரிதல் நோக்கிய கட்டுரைகள் தொடருவோம். தங்கள் ஆதரவிருந்தால். உடல், மன, ஆரோக்கியம் வேண்டி, தொடர்ந்து பகிர்வோம். நன்றிகள்