Sunday, July 4, 2021

உடல் பருனை குறைக்க வெறித்தனமான முயற்சியா ? இதைப் படிங்க முதல்ல!

பல விதமான DIET-ஐ பின்பற்றியும், EXERCISE செய்தும் உடல் எடை குறையவில்லையே என்று சலித்துவிட்டீர்களா? கவலை வேண்டாம்

உடல் எடையை (WEIGHT LOSS) குறைக்க வேண்டு என்று நினைத்தாலே, கவலையும், செலவும், கடைசியாக தோல்வியும் சலிப்பும்தான் மிஞ்சுகிறது என்று நினைக்கிறீங்களா? முதலில் இப்படி நினைப்பதே எதிர்மறை  எதிர்வினைகளை உங்கள் உடலுக்குள் உண்டாக்கும் !

உடல் பருமன் - விழிப்புணர்வு

ரிசர்வேஷன் செய்திருக்கும் சினிமா சீட்டிற்கும், ரயிலுக்கும், என்னமோ சாப்பாட்டையே பார்த்ததில்லை என்பது போல ஹோட்டலிலும் (பெருந்தொற்று காலத்திலும்), அடித்துக்கொள்வது, பணத்தை விரைவில் பல வழிகளிலும் செலவழித்து விட வேண்டும்  மனக் கட்டுப்பாடற்ற நிலை என்றும் உடல், மன ஆரோக்கியத்திற்கு கேடுதான். 

1. உடல் குண்டாக இருந்தால் என்ன? ஆரோக்கியமாக (HEALTHY) இருக்கிறோமா? என்பதை நன்கு யோசித்துப் பாருங்கள். ஆம்! உங்களுக்கு அவ்வபோது பசிக்கிறது (HUNGER), தாகம் (THURST) எடுக்கிறது, நன்றாக சாப்பிடுகிறீர்கள் (EATING), நன்றாக செரிமானம் (DIGESTION) ஆகிறது, நன்றாக தூங்குகிறீர்கள் என்றால், ஏன் உடல் எடையை பற்றி அலட்டிக் கொள்ள வேண்டும்? (மாடலிங், அழகன், அழகி போட்டி  உள்ளிட்ட உடல் எடை  சார்ந்தவை தவிர)   

2. காரணிகள்

உடல் எடைக்கு ஜீன்கள் (JEANS), பரம்பரை (HERIDITY), உண்ணும் உணவுக் கலாச்சாரம் (FOOD CULTURE), செய்யும் வேலை (JOB), இருக்கும் இடத்தின் காலநிலை (WEATHER) போன்ற பல காரணிகள் உண்டு. எனவே, உடல் எடை என்பது பற்றிய ஒரு விழிப்புணர்வு முதலில் அனைவருக்கும் தேவை. அப்போதுதான் தேவையில்லாத மற்றும் உங்கள் உடம்பின் வகையுடன் ஒத்து போகாத விஷயங்களில் இருந்து ஒதுங்கி இருக்க முடியும். இதுவே உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நீங்கள் செய்யும் முதல் மரியாதை! 

3. உண்மையான பலன்

உடல் எடையை குறைத்துவிட்டால், அதனால் உண்மையில் உங்களுக்கு பணமோ, சந்தோஷமோ, நிம்மதியோ, திருப்தியோ கிடைத்துவிடப் போவதில்லை. மாறாக, உடல் எடை குறைவதால், வெறும் உடல் எடை மட்டும்தான் குறைகிறது. மேலே சொன்ன எல்லாம், சமுதாய பார்வையில் நீங்களாகவே உடல் எடையோடு சம்பந்தப்படுத்திக் கொண்டதுதான். 

4. மனமே மந்திரம்

உடல் எடை என்பது மனதின் திறன் (WILL POWER) மற்றும் உடலுடன் சம்பந்தப்பட்டது என்பதை அறியுங்கள். அப்போதுதான், உடல் பருமனைக் குறைப்பதும் உங்கள் வசம் உள்ளது என்பதை உணர முடியும். 

5. வெறித்தனம் ஆபத்து

வெறித்தனமாக உடல் எடையை குறைக்க வேண்டும் என்று அதீத முயற்சியில் இறங்குவதை தவிருங்கள்! ஏனெனில், உடல் எடை இயல்பாகவும், ஆரோக்கியமான வகையிலும்தான் குறைக்கப்பட வேண்டும். 

குறுகியகாலம் உணர்ச்சிவசப்பட்டு எதையாவது ஆரம்பித்துவிட்டு, பின் தொடர முடியாமல் விட்டு விடுபவர்கள் நம்மில் பலர். உணவு கட்டுப்பாடு, ஜிம் பயிற்சி இவற்றால் மட்டுமே உடல் பருமன் நிரந்தரமாக குறைந்துவிடாது. ஜிம்மை விட்டால் உடல் மீண்டும் குண்டாகிவிடும். முன்பை விட அதிகமாக! 

6. எளிய பழக்கம்

பணம் செலவழித்தால்தான், ஜிம்மிற்கு சென்றால்தான், கடும் டயட் பின்பற்றினால்தான் உடம்பைக் குறைக்கலாம் என்பதெல்லாம் நாமே முடிச்சு போட்டுக்கொள்வதுதான்.  

இதற்கு பதிலாக, எந்த வித செலவும் இல்லாமல் உடல் எடை குறைப்பதுடன் தொடர்புடைய சில பழக்க வழக்கங்களை ஏற்படுத்திக் கொள்ள முயற்சிக்கலாம். உதாரணம் வெந்நீர் குடிப்பது, வேலைக்கு அல்லது பொருட்கள் வாங்க வேகமாக நடந்து செல்வது, சாப்பிடும்பொழுது டிவி பார்ப்பதோ, ஃபோன் பேசுவதோ தவிர்ப்பது. இப்படி உங்களுக்கு பொருத்தமான ஒவ்வொரு பழக்கமாக ஏறபடுத்திக்கொள்ளுங்கள். 

சில பல ஆயிரம் ரூபாய்கள் ஜிம்மிற்கும், மருந்துகளுக்கும் செலவிடுவதை விட, இந்த பழக்கவழக்கங்கள் நீண்ட நாளில் நல்ல பலனை நிச்சயம் தரும்! 

7. இருப்பதைக் கொண்டு

இன்று பெரும்பாலும் அனைவரிடமும் டிவி, ஆண்ட்ராய்ட் மொபைல் ஃபோன், நெட் வசதி உள்ளது.  யூடியூபில் தட்டினால் ஏகப்பட்ட எளிய உடற்பயிற்சிகள் வந்து கொட்டும். அதில் உங்களுக்கு பிடித்த வீட்டிலேயே செய்யக்கூடிய ஒன்றை தேர்ந்தெடுத்து தினசரி 15-30 நிமிடம் செய்யலாம். 

எண்ணை, கொழுப்பு, அசைவம் சாப்பிடும் இடைவெளியை அதிகப்படுத்தலாம். 

தினம் ஒரு பழம் சாப்பிடலாம். 

அல்லது பிடித்த பாடலை ப்ளே செது நடனம் ஆடலாம். (யாரும் இல்லாத நேரம்) 

நமது உடல் ஆரோக்கியம், சந்தோஷம், மன நிம்மதி மற்றும் திருப்தி இவைதான் வாழ்க்கையில் விலை மதிக்க முடியாதவை. எதற்காகவும் இவற்றை இழப்பது முட்டாள்தனமே! 

விழிப்புணர்வு பெறுவோம்! நன்றி!