Sunday, June 6, 2021

அது வேற! இது வேற !

தமிழ் இனி மெல்ல... இல்ல வேகமாக! 

பொதுவாக செய்திகள் (எந்த வடிவில் இருந்தாலும்) அவற்றை செய்திகளாகவே தெரிவிப்பதுதான் செய்திகளின் நோக்கம். அது வேறு!  

செய்திகள் (குரல் வழியாக வாசிக்கப்படும்பொழுது, அச்செய்தி ) எத்தன்மை வாய்ந்ததாக இருப்பினும், அங்கீகரிக்கப்பட்ட, உரிய நபர்களிடமிருந்து தகவல்களைத் திரட்டி, அதில் உணர்ச்சியைக் கலக்காமல் தட்டையான தொணியில் ( உச்சரிப்பு வேறு ) அறிவிப்பதுதான் தொழில்முறை செய்தி வாசிப்பு ( PROFESSIONAL NEWS READING) மற்றும் ஊடகங்களின் கடமையும் கூட.  

ஆனால் இன்று மலிந்து கிடக்கும் ஊடக, சமூக ஊடகங்களால், ஆளாளுக்கு போட்டி போட்டுக் கொண்டு, நாந்தான் முதலில் செய்தியைத் தருகிறேன்... நான் தான் பரபரப்பு ஏற்படுத்துகிறேன், நான் தான் யாருக்குமே தெரியாத விஷயத்தை துப்பறிந்து தருகிறேன்... என்கிற பேரில், யூகங்கள், கற்பனைகள் கலந்து,  உண்மையில் சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ, முரணாக, பொருத்தமில்லாமல், அபத்தமாகவே பல செய்திகள், குப்பை போல,  மக்கள் முகங்களில் தூக்கி வீசப்பட்டுக் கொண்டிருக்கின்றன. (TRP  மிக முக்கியம் அமைச்சரே! ) இது வேறு! 

செய்தியின் Authentication பற்றி பெரும்பாலான மீடியாக்கள் கவலைப்படுவதாக தெரியவில்லை. (அது  Police, Court CBI பார்த்துக்கும்னு நினைப்பு போல )
 
எதிர்மறைச் செய்திகள் சாதாரணமாகவே மக்களின் மனதை பாதிக்கும் என்கிற உண்மை ஒரு பக்கம் இருக்கட்டும்! அது வேறு. அத்துடன் உணர்ச்சிமய, நாடக பாணி குரல், (ழ, ல, ள வராது. இது வேறு ) (அதைப் பற்றியும் மீடியாக்களுக்கு கவலை இல்லை. )

பார்வையாளர்களின் உணர்ச்சியைத் தூண்டி (சுரண்டி) பிழைப்பு நடத்துவது கற்பனையும், கலையும், வியாபாரமுமான, சினிமா, நாடகத்திற்கு ஏற்புடையதாக இருக்கலாம். அது வேறு. ஆனால், செய்திக்கு... ? இது வேறு.  

சில செய்திகள் கன்றாவி ரகம்! நான்கு வரி செய்தியை 10 நிமிடங்களுக்கு இழுத்து இழுத்து ஒரு கேவலமான வாசிப்பு வேறு! Slow Motion-ல சீன் பார்த்திருப்போம். Slow motion ல செய்தி வாசிக்கிறது... பாவம் வியூவர்ஸ்!  

கொட்டை எழுத்தில் போடும் தலைப்புச் செய்திகளிலேயே (Thumbnail Image / Poster) எழுத்துப் பிழை. (இவர்களுக்கு தெரிந்த தமிழே அரைகுறை. ) இது வேறு. 

(மிமிக்ரி பண்ண வந்தா மிமிக்ரி பண்ண வேண்டியதுதான?. டப்பிங் பண்ண ஆசை இருந்தா போய் பண்ண வேண்டியதுதான. (அதுக்கு 1 அரை லட்சம் பணம் கட்டி உறுப்பினர் ஆகணும்ல... சும்மாவா? பணம் இருந்தாலும், அதுவும் இவர்களுக்கு ஒழுங்கா வராது. அதற்கு பயிற்சி வேண்டும் அமைச்சரே!    அது வேற  ) 

ஒரு பிரபல செய்தித்தாள். அது எந்த பிட்டு செய்தியாக இருந்தாலும், “இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பரபரப்பை, அச்சத்தை, பயத்தை  ஏற்படுத்தியுள்ளது,... என்று தான் எல்லா செய்தியையும் முடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறது.  
 
திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால்... மக்களாய் பார்த்து Unsubscribe செய்யாவிட்டால், பார்க்காமல் விட்டுவிட்டால்... 

தமிழ் இனி மெல்ல இல்ல, வேகமாகவே .. அன்றே சொன்ன தீர்க்கதரிசி பாரதி வாழ்க! 

நன்றிகள்!