Wednesday, February 3, 2021

வாழ்க்கையை (LIFE) நல்லா என்ஜாய் (ENJOY) பண்ணனும்னு நினைக்கிறீங்களா? (பகுதி - 2)

அப்படின்னா நீங்க எல்லாரும் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்கள்!! (MUST READ)

இத யாராலயுமே செய்ய முடியாது அப்டின்னு எதாவது இருக்கா கோவிந்தா? என்றபடியே ஆசுவாசமாக கடற்கரை மணலில் அமர்ந்தார் மதி.

Image Source:ArtandLife

இருக்கே… என்றபடி கோவிந்தும் காலனியை ஓரமாக கழற்றிவிட்டு, கடலைப் பார்த்தபடி, மதி அருகே அமர்ந்தார், மதி அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க, கடற்காற்று கோவிந்தின் முடிகளைக் கோதியது.

வாழ்க்கைல நினைச்சதை சாதிக்கணும்… அப்டிங்கிற எண்ணம்தான், எத்தனை கோடி பேர் வாழ்க்கையில நிராசையாவே இருக்கு…!? என்ற கோவிந்த் கடற்கரையும் வானமும் பிரியும் எல்லையை உற்று நோக்கினார்.

கோவிந்தோ, நீ சொல்றத வச்சு பாத்தா, வாழ்க்கையில அடைய முடியாத எதையாவது குறிக்கோள்னு (AMBITION) வச்சுகிட்டு, அதுக்காக பசி, தூக்கம் மறந்து ஓடிகிட்டே இருக்கறதுக்கு பேர்தான் அர்த்தமுள்ள வாழ்க்கையா? சராசரி வாழ்க்கை எல்லாம் வாழ்க்கையே இல்லையா?

அட, அப்டி இல்ல மதி! ம்… வாழ்க்கையில சாதிச்சு என்ன பண்ணப் போறோம்… சொல்லேன்…

நினைச்சத சாதிச்சா, சந்தோஷமா (HAPPY), நிம்மதியா (PEACEFUL), சொகுசா (LUXURY) இருக்கலாம்…. என்றார் மதி.

பலமாக சிரித்த கோவிந்தை புரியாமல் பார்த்தார் மதி. சிரித்து முடித்த, கோவிந்த், “இப்ப நா சந்தோஷமா, நிம்மதியா, சொகுசா இருக்கேன்னு சொல்றேன்…. உன்னால மறுக்க முடியுமா?

மதி இதற்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியாமல் கடலை வெறிக்கப் பார்த்தார். பின் நாம் எதை சாதித்து விட்டோம் என்ற தொணியில் மதி கோவிந்தைப் பார்த்தார்.

கோவிந்த், “மதி! சுதந்திரம் (FREEDOM), சந்தோஷம் (HAPPINESS), நிம்மதி (PEACE OF MIND), அதாவது பசிக்கிறப்ப, புடிச்ச சாப்பாட்ட ரசிச்சு சாப்பிடறது (FOOD), தூக்கம் வர்றப்ப தூங்கறது (SLEEPING)… இதையெல்லாம் இப்ப அனுபவிச்சிகிட்டு இருக்கற நாமதான் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலி. அதுக்காக தினமும் கடவுளுக்கு நன்றி சொல்லிகிட்டே இருக்கலாம்….

மதி: இதெல்லாம் ஒரு சாதனைங்கறியா?

சிரித்துவிட்டு சொன்னார் கோவிந்த்: Of course, உனக்கே தெரியும், ஆறு மாசம் அதாவது LOCKDOWN-க்கு முன்னாடி நாம நாலு பேர் அடிக்கடி மெரினாவுக்கு வருவோம். இப்ப ரெண்டு பேர்தான் வர்றோம்…. ரெண்டு பேர் இந்த உலகத்தைவிட்டே போயிட்டாங்க. ஆனா, நாம, உயிரோட இருக்கோம் (ALIVE), அதுமட்டுமில்ல, நேரம் இருக்கறதால, பீச்சுல நல்ல காத்து வாங்கிட்டு இருக்கோம். இதெல்லாம் பெரிய ACHIEVEMENTஇல்லையா? இதெல்லாம் செய்ய எல்லாருக்குமா குடுத்து வச்சிருக்கு? இதுக்காக கடவுளுக்கு தினமும் நன்றி சொல்ல வேணாமா?

மதி: நீ சொன்னதென்னமோ வாஸ்தவம்தான் கோவிந்தோ., ஆனா அடுத்த நிமிஷம் மாசாந்தர செலவ யோசிச்சா, தலை சுத்துதே… !

கோவிந்த், “ அதெல்லாம் இருக்கத்தாண்டா செய்யும். இப்படி ஒரு வைரஸ் வரல, லாங் லாக்டவுன் போடலன்னா மட்டும் நம்மள மாதிரி MIDDLE CLASS வாழ்க்கை எல்லாம் அம்பானி வாழ்க்கை மாதிரியா ஆகிருக்கும்?

மதி: இதுவும் நியாயமான கேள்விதான். ஆனா, நாம என்னதான் பீச்சு, பார்க்கு, கோவில்னு போனாலும் அடுத்த நிமிஷமே, COMMITMENTS ஞாபகம் வந்தது, மனசுல ஒரு STRESS தானாவே வந்துடுது. அதுக்கு என்ன பண்றது?

கோவிந்த்: சிம்பிளா சொல்லணும்னா, இப்ப நாம எங்க இருக்கோம்?

மதி: பீச்சுல?

கோவிந்த்: நாம ஏன் இங்க வந்தோம்?

மதி: Relaxed-ஆ காத்து வாங்கலாம்னு.

கோவிந்த்: கரெக்ட். அப்ப அத செய்யாம நாம ஏன் வேற எது எதையோ பேசிகிட்டு இருக்கோம்?

வசமாக மாட்டிக்கொண்டது போல, புரியாமல் பார்த்தார் மதி. பிறகு, “நண்பர்கள் ரெண்டு பேர், ஒரு இடத்துக்கு சேர்ந்து வர்றப்ப, எப்படிப்பா எதுவுமே பேசாம இருக்க முடியும்? இதுக்கு வீட்லயே இருந்திருக்கலாமே? இதுக்கும் என்னோட STRESS போறதுக்கும் என்ன சம்மந்தம்?

கோவிந்த்: இருக்கு மதி. பீச்சுக்கு ஜாலியா, காத்து வாங்க வந்த நாம, அத மட்டும் செஞ்சுட்டு போய்கிட்டே இருந்தா, இந்த நேரத்தை உண்மையா ENJOY பண்ணிருப்போம். உதாரணம் எளிமையா இருந்தாலும், இதுக்கு பின்னாடி ஒரு பெரிய தத்துவ விளக்கமே (PHILOSOPHY) இருக்கு மதி. எந்த இடத்துல எந்த நோக்கத்துக்காக இருக்கோமோ, அந்த வேலைகளை மட்டுமே செஞ் பழகிட்டா, நமக்கு இருக்கற வரப்போற STRESS-ல 95%, வரவே வராது.

மதி யோசித்ததில் லேசாக புரிந்தது போல தெரிந்தது. ”அப்படின்னா, நமக்கு இருக்கற பிரச்சனைகளைப் பத்தி பேசறது தப்பா?

கோவிந்த்: No No, கண்டிப்பா யோசிக்கணும், பேசணும் ஆனா, பிரச்சனைக்கு எல்லாம் நிரந்தரமா ஒரு தீர்வு காணனும் (PERMANENT SOLUTION) அப்படிங்கிற ஒரு நோக்கத்தோட, EGO, EMOTION, PERSONAL BONDING எல்லாத்தையும்  தூக்கி ஓரமா வச்சுட்டு, நடுநிலையோட தீவிரமா யோசிக்கணும். அப்பறம் கொஞ்சம் இடைவெளி விட்டு, இந்த மாதிரி ரிலாக்ஸ்டா இருக்கறப்ப நம்ம பிரச்சனைக்கான SOLUTION கிடைக்கும். அடுத்து நாம என்ன செய்யணும்னு தெளிவான ஒரு ஐடியா வரும். அதுக்கப்பறம், அத செயல்படுத்த வேண்டியதுதான் (ACTION). அப்படி செயல்படுத்திட்டு இருக்கறப்ப, அத பத்தி எதுவும் யோசிக்ககூடாது. இவ்ளோதான்!

மதி: ரொம்ப EASY மாதிரியும் இருக்கு, ரொம்ப கஷ்டம் மாதிரியும் இருக்கு. ஆனா இதெல்லாம் எல்லாராலயும் செய்ய முடியுமா என்ன?  

சிரித்துவிட்டு, கோவிந்த்: ஏன் முடியாது? பிரச்சனைக்கு நிரந்தரமான தீர்வை நோக்கி போகணும்ங்கிற தீர்மானமும் (DETERMINATION), அதுக்கான செயல்ல இறங்க மன வலிமையும் (WILL POWER) இருந்தா, கண்டிப்பா நம்ம வாழ்க்கையில நல்ல மாற்றங்கள் ஏற்பட்டே தீரும். இது உறுதி.

”சுக்கு காப்பி சார், சுட சுட சுக்கு காப்பி…” என ஒரு சிறுவன் குரல் கேட்க, ”தம்பீ ரெண்டு சுக்கு காப்பி குடுப்பா”! என்று கோவிந்த் அழைத்தார்.

இருவரும் கடல் அலையையும் சுக்கு காப்பியையும் ரசித்தார்கள். நாமும் தொடர்ந்து ரசிப்போம். நண்பர்களுடன் பகிருங்கள்! உங்கள் கருத்துக்களையும் பகிருங்கள்! நன்றி!.