Sunday, December 6, 2020

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (SUPER STAR) சினிமா Vs. அரசியல் - ஒரு ஜாலி பேச்சு! (ENJOY)

இப்போ இல்லன்னா, எப்பவுமே இல்ல. வெற்றியா இருந்தாலும், தோல்வியா இருந்தாலும் எல்லாம் மக்களுக்கே.  கட்சி, ஆட்சி மாற்றம் இப்போ கட்டாயம் நடந்தே தீரணும். மாத்தணும் எல்லாத்தையும் மாத்தணும்! என் உயிரே போனாலும்…

மதி சொல்லி முடிக்கும் முன், ”உயிரே போனாலும், சுண்டலை கீழ போட்டுடாத! என்றபடி மதியோடு, கோவிந்த் கடற்கரை மணலில் அமர்ந்தார்.

கோவிந்த்: வரலாறு கொஞ்சம் சொல்லேன்..!?

மதி: Its my pleasure கோவிந்தோ… 2017, டிசம்பர் 31-ஆம் தேதி ஒரு மேடையில பேசும்போதுதான் ரஜினிகாந்த், முதல் முறையா அரசியலுக்கு வரப் போறேன்னும், 2021 தேர்தல்ல 234 தொகுதிகள்லயும் போட்டி போடப் போறதாவும் சொன்னாரு.  .

சூப்பர் ஸ்டார், படம் மாதிரியே யாருமே எதிர்பார்க்காத நேரத்துல, எதிர்பார்க்காத ஒரு செய்திய சொல்லி குளிர வச்சுட்டாருடா ஜனங்கள் மனச… என்ன ஒரு அதிசயம் இது! என்றபடி சுண்டல் பொட்டலத்தை பிரித்து, ஒரு கையில் எடுத்து, வாயில் போட்டார் மதி!

கோவிந்த்: மனசு குளிர்ந்துச்சோ இல்லையோ, அவர் அறிக்கை விட்ட அன்னைக்கு மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டி இந்த சென்னையே குளிர்ந்து போச்சு, இதுல்ல அதிசயம்… 

மதி: அத விடு கோவிந்தா! சினிமால, கிட்டத்தட்ட 45 வருஷமா ஒருத்தர் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார்னா, அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  ஒருத்தர்தான் இல்ல… என்ற மதியின் வார்த்தைகளை ஆமோதித்தார் கோவிந்த்.

”ஒரு சில கதைகள் ரஜினியைத் (RAJINI) தவிர வேற யார்  நடிச்சிருந்தாலும் அட்டர் ஃப்ளாப் ஆயிருக்கும் தெரியுமா?

கோவிந்த் மீண்டும் தலையாட்டினார்.

மதி: அட கோவிந்து… கிட்டத்தட்ட 20 வருஷத்துக்கு மேல ஒரு நடிகர் (RAJINI), அரசியலுக்கு இப்போ வருவாரு அப்போ வருவாருன்னு, இப்ப புதுசா சொன்ன மாதிரி, அதே ஆர்வத்தோட, எதிர்பார்ப்போட, ஜனங்கள் காத்துகிட்டு இருக்காங்கன்னா, அது ரஜினி ஒருத்தருக்குதான்னு சொல்றேன்.

கோவிந்த் இதற்கு தலையாட்டாமல் கடலை நோக்கி தன் பார்வையை திருப்பினார். 

மதி: ஒரு நடிகருக்கு என்ன பெருசா அரசியல் பத்தி தெரியும்னு நீ தலைய திருப்புறதுலயே தெரியுது… சொல்றேன்.

அதை விட, இதை யாரும் சாதாரணமா எடுத்துக்க முடியாதுங்கிறதுதான் ரொம்ப முக்கியம். ஏன்னா, தமிழ்நாட்ல அரசியல் ஹிஸ்டரி அப்படி. M.G.R ஆகட்டும், ஜெயலலிதா ஆகட்டும், கலைஞர் ஆகட்டும், இவ்வளவு ஏன் விஜயகாந்தா ஆகட்டும்… எல்லாருக்கும் சினிமாவினால ஜனங்கள்கிட்ட இருந்த செல்வாக்கு அப்படியே ஓட்டா மாறி தலைவர்கள் ஆனாங்கல்ல. அது ஒண்ணுதான் மதி அத்தனை அரசியல்வாதியையும் ரூம் போட்டு யோசிக்க வைக்குது!

கோவிந்த்: அது உண்மையா இருக்கலாம் மதி. ஆனா, நீ சொன்ன அந்த So and So பர்சனாலிட்டீக்கள் எல்லாருமே, POLITICS-ல ENTRY ஆகறதுக்கு முன்னாடி, பல வருஷமாவே தங்களை தயார் படுத்திகிட்டு இருந்திருக்காங்க. ரசிகர் (FANS) மன்றங்களை தொண்டர்களா மாத்துறதுல ஆரம்பிச்சு, மக்கள் பிரச்சனைகளுக்கு (RAISING VOICE FOR PUBLIC ISSUES) குரல் கொடுக்குறதுன்னு.. இதுக்கு நிறைய உதாரணங்கள் சொல்லலாம்.

Image:ArtandLife

ஆனா, உங்க SUPER STAR RAJINI SIR அப்படி எதுவும் இந்த 25 வருஷத்துல செஞ்சுருக்காரா என்ன? அதிகபட்சம் அவர் கருத்து தெரிவிச்ச சமூக விஷம்னு பார்த்தா, முருகனோட வேல் மேட்டரும், தூத்துக்குடி சம்பவமும்தான். அதுலகூட அவர் சொன்ன பதில்கள் எப்படிப்பட்டதுன்னு, ஊருக்கே தெரியும். அதனாலதான் கேட்டேன். இதெல்லாம் அவருக்கு செட் ஆகுமா?  

மதி: ஆழமா தியானம் (MEDITATION) KRIYA YOGAM பயிற்சி பன்ற ஒருத்தருக்கு எதுவும் செட் ஆகும் கோவிந்தா!

கோவிந்த் அமைதியாக இருந்தார்.

மதி: சரி, காமராசர், கக்கன்  மாதிரியானவங்க எல்லாம் அரசியல்ல சாதிக்கலையா?  

கோவிந்து: இப்ப நாம அரசியல்வாதிகளைப் பத்தி, குறிப்பா சூப்பர் ஸ்டார் RAJINIKANTH பத்தி மட்டும் பேசுவோமே.  

மதி புரிந்ததுபோல பம்மி, தலையாட்டினார்.

கோவிந்த்: நா ஸ்கூல், காலேஜ் படிக்கிறப்ப, தலைவர் படம் ரிலீஸ்னா போதும், FIRST DAY, FIRST SHOW பாத்தாதான், சோறு தண்ணி உள்ள போகும்”.   

மதி: படம்னதும் ஞாபகம் வருது. அண்ணாத்தை படம் என்னாச்சு?

கோவிந்த்: அதுல 40 % வேலை பாக்கி இருக்கு. அதை முடிக்க வேண்டியதும் என் கடமைன்னும், அதோட, எனக்கு ஜனங்கள் எல்லாருமே நிச்சயமா ஆதரவு தரணும்னும் ரஜினி சாரே சொல்லி இருக்காரே.  

மதி: அதுசரி மதி, அவருக்குத்தான் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, அது இதுன்னு பண்ணி உடம்பு ரொம்ப மோசமா இருக்கறதா DOCTORS ADVISE பண்ணிருக்கறதா சொல்றாரே… அப்பறம் எப்படி ஏன் இதெல்லாம்?

கோவிந்த்: அது போன மாசம்.

மதி: அதுசரி, ஒருவேள அவர் ஜெயிச்சு ஆட்சிக்கு வந்தப்பறம், உடல்நிலை சரியில்லைன்னா, ஜனங்கள் நிலைமை என்ன ஆகும்?  

கோவிந்து: அடே, மதிகெட்ட மதி.. அவருக்கு ஒடம்பு மோசமானா ஜனங்களுக்கு என்ன? அதுமட்டுமில்ல, நம்ம தமிழ் ஜனம் அரசியல்ல பார்க்காத Stunt-ஆ, DRAMA-வா?  

மதி புரிந்துகொண்டார்.

கோவிந்த்: நம்பி வந்தை யாரையும் விடமாட்டேன். இது விளையாட்டுன்னு இல்லன்னு சொன்னவர்கிட்ட இதுக்கும் ஒரு ப்ளான் இருக்கும்னு நம்புவோம் பிரார்த்திப்போம்.

மதி: சரி, ரஜினியோட ஆலோசகர் ஒருத்தர் அர்ஜுன மூர்த்தி, BJP-ல அறிவுசார் துறை தலைவர் தான…

கோவிந்த்: அவர் அதுல இருந்து வெளில வந்துடுவாரு.  

மதி: ADMK-ல இருந்து, ரஜினியோட கூட்டணி அமையவும் வாய்ப்பு இருக்கிறதா சொல்லி இருக்காங்களே.. ஒருவேள ரஜினி பி.ஜே.பியோட தமிழ்நாட்டு வாரிசா இருப்பாரோ?

கோவிந்த் பதிலோ, ரீஆக்‌ஷனோ இன்றி, தனது சுண்டல் பொட்டலத்தை பிரித்தார், சில நொடிகள் மௌனமாக கடல் அலை, சுண்டல், கரையில் விளையாடும் சிறுவர்களை ரசித்தபடி ஆழந்து யோசித்தனர்.

மதி: அதெப்படி கோவிந்தா ஒருத்தர்  ஆறே மாசத்துல C.M ஆக முடியும்?!.

கோவிந்த்: நீ கூடத்தான் இப்ப ஆறே வாய்ல, ஒரு சுண்டல் பொட்டலத்தையே காலி பண்ணல.!?

மதி: விளையாடாத கோவிந்தா,

கோவிந்த்: விளையாடறது நா இல்ல. அந்த..

மதி ஏதோ சொல்ல வர, கோவிந்த் (குறுக்கிட்டு): ”விளையாடறது அவரு… என மேலே கடவுளை கை காட்டினார்.

கோவிந்த்: தியானம், பிரார்த்தனை, பாபாஜி அருள் இது எல்லாமே கூடி வந்த ஒருத்தரால, என்ன வேணாலும் ஆகமுடியும்டா மதி. அந்த மேஜிக் நடக்கணும்னா நடக்கும். அவ்ளோதான், அப்படி ஒண்ணு நடந்தா நல்லா இருக்கும்லன்னு போட்டு குழப்பிடாத. போதுமாடா!?.

மதி தலையாட்ட. இதமான மாலை வெயில் இருவர் மேலும் அடிக்க ஆரம்பிக்கிறது. நடப்பது நடக்கட்டும்! நாமும் கொஞ்சம் வெயிலில் குளிப்போம். தொடர்ந்து பகிர்வோம்! நன்றி!

N.வெங்கடேசன்

எனது யுடியூப் வீடியோக்களை பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்.

#Vforvisuals#Rajinikanth#ArtandLife