அப்படின்னா, நீங்க அவசியம் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்கள்!
“லைஃப்னா நல்லா என்ஜாய் பண்ணனும் கோவிந்தா”, அதுதான் மனுஷனா பொறந்தவனுக்கு மட்டுமில்ல, ஈரேழு உலகத்துலயும் பொறந்த, பொறந்துகிட்டு இருக்கற, பொறக்கப் போற எல்லா ஜீவராசிகளுக்கும் இருக்கற ஒரே நோக்கம், என்ன சொல்ற?” என்றார் மதி கடற்கரையை நோக்கி நடந்தபடி. “இதுதான பலரோட மைண்ட் வாய்ஸ்..என்றார் கோவிந்த். இருவரும் கடற்கரை மணலில் வந்து அமர்ந்தார்கள்.
மதி : என்னா வாழ்க்கைடா சாமி. ஒரே சலிப்பா இருக்கு. தினமும் ஒரே வீடு, ஒரே வேலை, பழகிபோன அதே அப்பா, அம்மா, அதே மனைவி, நண்பர்கள், அதே வேலை, அதே லோன், அதே EMI-அது முடிஞ்சா புது லோன், புது EMI, பஞ்சாயத்துன்னு…… ஆனா...
கோவிந்த் செல்லமாக முறைத்தார்.
மதி: யம்மாடீ! ஐ படத்துல கிளைமேக்ஸ்ல சதா
சொல்ற மாதிரி, எங்கயாவது கண்காணா இடத்துல போயி நிம்மதியா வாழணும் போல இருக்கு.
கோவிந்த்: ”இதுதான் ஒட்டுமொத்த மிடில்கிளாஸோட ஜனரஞ்சகமான சவுண்ட்
வாய்ஸ். அவ்!
மதி: சரி, இந்த சராசரி வாழ்க்கைச் சுழல்ல இருந்து எப்பதான் நாம வெளில வந்து, நிம்மதியான, சுதந்திரமான, சந்தோஷமான வாழ்க்கையை வாழப் போறோமோ?
கோவிந்த்: வாழ்க்கையில முன்னேற துடிக்கிற.. போராடிட்டு இருக்க... உன் கேள்வியும் நியாயம்தான்.
மதி: ஆனா, இதுக்கெல்லாம் ஏது முடிவு? உயிர் இருக்கற வரைக்கும் மெஷின்
மாதிரி ஓடிகிட்டேதான் இருக்கணும்.
கோவிந்த்: அப்படின்னு எந்த கட்டாயமும் இல்லைடா...
மதி எப்படி என்பது போல புருவம் சுருக்கி கோவிந்தை
பார்த்தார்.
கோவிந்த்: முதல்ல என்ஜாய்மெண்ட்னா என்னன்னு தெரிஞ்சுப்போமே! சிலருக்கு எக்ஸாம் இல்லாம பாஸ் ஆகணும், சில பேருக்கு பணம் (MONEY), சிலருக்கு குடி (DRINKS), சிலருக்கு உயர் பதவி (POSITION), சிலருக்கு புகழ் (FAME), சிலருக்கு சொத்து (PROPERTIES) (பத்துக்கும் மேல), சிலருக்கு நிறைய பெண்கள் (WOMEN), ஆண்கள் (MEN) (சபலிஸ்ட்)… வேற எதுவா இருந்தாலும் கிட்டத்தட்ட இதை சுத்திதான் இருக்கும்னு சொல்லலாம்.
மதி: இவ்வளவுதானா?
கோவிந்த்: சில பேருக்கு, பசிக்கறப்ப ரெண்டு வேளை
எதோ, கஞ்சியோ, கூழோ குடிச்சிட்டு தூக்கம் வர்றப்ப நிம்மதியா தூங்கினாலே போதும்ப்பா!
வேற ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம்!
சில பேருக்கு சாமி, பூஜை, நிறைய கோவில், குளம்,
புண்ணியஸ்தலங்கள் சுற்றுவது, தீவிர தியானம்,
யாருக்காவது உதவிகிட்டே இருக்கணும், இதுவெல்லாம் கூட என்ஜாய்மெண்ட். இதுல என்ன பியூட்டின்னா,
இதுல எந்த CATEGORY-ல வர்றவங்களா இருந்தாலும், இன்னொரு CATEGORY-ல வர்றவங்கள பத்தி பெருசா அலட்டிக்க மாட்டாங்க.
மதி: ஆமா, அதெல்லாம் ஒரு வாழ்க்கையா? அதுல என்ன சுவாரஸ்யம் இருக்க முடியும்?? கோவிந்து…! நிறைய பணம் செலவு பண்ணினாத்தான் சந்தோஷம்.. பணமில்லாம இங்க ஒண்ணும் கிடைக்காது. நடக்காது.
கோவிந்த்: ”அடேய் மதி… உன் மதியை, நுகர்வுக்
கலாச்சாரம் பெரிய ஸ்கீர்ன் போட்டு மூடி வச்சிருக்கு. அதான் இப்படியெல்லாம் பேசற. யார்
எப்டி போனா என்ன, எனக்கு டப்புதான் முக்கியம். என்னோட FREEDOM & ENJOYMENT தான்
முக்கியம்னு ஓடிகிட்டு இருக்கற கூட்டம்தான் ஜாஸ்தி. அதே நேரம், உலகமே உன்ன எதிர்த்தாலும்னு,
தல அஜித் சொல்ற மாதிரி, அதெல்லாம் போலின்னு, உண்மையா, நேர்மையா, உறுதியா நம்பி வாழற
ஒரு சின்ன கூட்டமும் இங்க இருக்கு மதி. அதான் கெத்து!
மதி: அட என்ன கோவிந்தா நீ ! சந்தோஷத்துக்கே புது
அர்த்தம் குடுக்கற? கெத்தா, சொத்தான்னு வர்றப்ப, சொத்துதானப்பா ஜெயிக்குது. நீ சொல்றபடி
பாத்தா, மத்தவங்க எல்லாம் முட்டாளா?
கோவிந்த்: அத நா வேற தனியா சொல்லணுமா என்ன? அதான்
அவங்க அவங்க மனசாட்சியே தினம் தினமும் கொல்லுமே!
மதி : கோவிந்தோ, நீங்க ரொம்ப தப்பான ஆங்கிள்ல திங்க்
பண்றீங்கோ.
கோவிந்த்: அட மதிகெட்ட மதியே! தப்பு எல்லாம் சரி,
சரி எல்லாம் தப்பு. கஷ்டம் எல்லாம் ஈசி, ஈசி எல்லாம் கஷ்டம்னு அடிச்சு சொல்ற அளவுக்கு,
மூளை மழுங்கி கிடக்கறப்ப, ஆயிரம் விளக்கம் சொன்னாலும், யாரு ஒத்துக்கப் போறா? அதுக்காக
கீதைல சொன்ன உண்மை மாறிடுமா என்ன?
மதி: என்னடா கோவிந்தா, உதரணத்துக்கு அஜித்தையும்
சொல்ற, கீதையும் சொல்ற..! என்ன மாதிரி மிடில் கிளாசுக்கு பஞ்சிங்கா
எதாவது சொல்றா!
(சிரித்துவிட்டு) கோவிந்த்: இங்க நிம்மதியா, சந்தோஷமா
வாழறதுக்கான செலவு ரொம்ப ரொம்ப கம்மி. ஆனா, அடுத்தவங்க மாதிரி வாழறதுக்கான செலவு ரொம்ப ரொம்ப
அதிகம்.
மதி: நீ சொல்றத வச்சு பாத்தா, லைஃப்ல முன்னேணும்னு நினைக்கறதே தப்புங்கிறியா?
கோவிந்து: முன்னேற நினைக்கிறதோ, அதுக்காக முயற்சிக்கிறதோ
தப்பில்லை. அதுக்கு தேர்ந்தெடுக்கற வழி இருக்குல்ல (MEANS) அதுவும் ரொம்ப முக்கியம்டா.
மகாத்மா கூட இத பத்தி சொல்லி இருக்காரே!
மதி: நீ சொல்றபடி நேர்மை, உண்மை, தூய்மைன்னு இருந்தா,
வயசாயிடுமே, நாலு நல்லது கெட்டத அனுபவிக்காமலே மேல போயி சேந்துட்டா... வயசு இருக்கும்போதே
என்ஜாய் பண்ணனும்டா. அதுதான் அந்த வயசுக்கே நாம குடுக்கற மரியாதை.
கோவிந்து சிரித்ததுமே, மதிக்கு புரிந்தது, ஏதோ உதாரணம்
சொல்லப் போகிறார் என்று.
கோவிந்து: “இப்ப சாப்பிட்டா ஒண்ணு. நாளைக்கு வந்து
சாப்பிட்டா 2 சாக்லேட். உங்க இஷ்டம்னு, ஒரு
ரூம்ல 30 ஸ்கூல் பசங்கள விட்டு, ஆளுக்கு ஒரு சாக்லேட் கொடுத்துட்டு எல்லாரும் போயிட்டாங்க.
அதுல கிட்டத்தட்ட 22 பசங்க, உடனே எடுத்து சாப்பிட்டுட்டாங்க. நீ சொன்ன ரகம். மீதி
8 பேர். அடுத்த நாள் வந்து ஆளுக்கு 2 சாக்லேட் வாங்கி சாப்பிட்டாங்க.
மதி யோசித்தான்.
கோவிந்த்: 8 பேரோட தத்துவம் DELAYED
GRATIFICATION. அவங்க 25 – 30 வருஷம் கழிச்சு வாழ்க்கையில மத்த 22 பேரைவிட, வாழ்க்கையில
நல்ல உயர்ந்த நிலையில இருந்திருக்காங்க.
மதி: அடே கோவிந்தா! சாக்லேட்டுக்கும் லைஃபுக்கும்
என்னடா சம்மந்தம்?
கோவிந்த்: இது ஒரு விதமான அப்ரோச்டா (APPROACH). பார்வை (ANGLE) கோணம், தத்துவம் (PHILOSOPHY), வாழ்க்கை முறைன்னு
(LIFESTYLE) சொல்லலாம். உலகத்துல மிகப்பெரிய INVESTOR வாரன் பஃபட், அவரே இதைத்தான்
கொள்கையா பரிந்துரைக்கிறார். அவர மாதிரி லைஃப்ல பெரிய பெரிய சாதனைகள் செஞ்ச பெரும்பாலானவங்களுக்கு
இந்த ATTITUDE தான், அவங்கள இந்த அளவுக்கு உயர்த்தி இருக்கு.
மதி: என்னென்னமோ சொல்ற கோவிந்தா நீ!
கோவிந்த்: அடேய்! இப்ப நீ ஒரு இடத்த வாங்கினா, நாளைக்கேவா
வித்துடுவ? அதோட மதிப்பு பல மடங்கா ஏறணும்னா, பல வருஷம் காத்திருக்க மாட்ட!? அதே மாதிரி…
மதி: ஓஹ், இப்ப கொஞ்சம் புரியற மாதிரி இருக்குடா.
”சார், சூடான சுக்கு காப்பி, சுக்குகாப்பி சார்…” என்று ஒருவன் கையில் வாளியுடன் நீட்ட, மதியின் நாக்கு ஊற. அதைப் புரிந்து கொண்ட கோவிந்த்,
”ரெண்டு சுக்கு காப்பி கொடுப்பா! என்றார்.
கோவிந்தும், மணியும் கடல் அலையை மட்டுமல்ல, சுக்கு காப்பியையும் ENJOY செய்தார்கள். நாமும் தொடர்ந்து ENJOY செய்வோம். நன்றி!

