Sunday, December 15, 2019

என் நெஞ்சில் குடியிருக்கும்...

என் நெஞ்சில் குடியிருக்கும் மகிழ்ச்சிக்கு நன்றி! 


மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்கிற ஆர்வத்தில் இந்த கட்டுரையை படிக்க முடிவெடுத்ததற்கு நன்றி. இதிலுள்ள ஏதாவது ஒரு விஷயம் உங்கள் வாழ்க்கையில் ஏதேனும் ஒரு வகையில் சந்தோஷம் கொடுத்தால், அல்லது கொடுத்துக் கொண்டிருந்தால் மிக்க மகிழ்ச்சி.
மகிழ்ச்சியில் புதிதென்றோ, பழையதென்றோ ஒன்றுமில்லை. மகிழ்ச்சி என்றால் ஒரே மகிழ்ச்சிதான். அதுமட்டுமல்ல, மகிழ்ச்சி என்பது புதிதான ஒன்று, மிகவும் சிரமப்பட்டோ, போராடியோ தேடிப்பெற வேண்டியது, அல்லது எங்கோ தொலைத்துவிட்டோம், இழந்துவிட்டோம் என்றோ நினைக்கிறீர்களா…? I am very sorry. அப்படி எல்லாம் எதுவும் இல்லை மக்களே!

மகிழ்ச்சி எப்போதுமே, நம் மனதிற்குள் இருந்து கொண்டுதான் இருக்கிறது. கடவுள் போல. நாம் தான் அதன் மீது கவனம் செலுத்துவதை விடுத்து, வேறு எதைப் பற்றியெல்லாமோ சிந்தித்துக் கொண்டும், விவாதித்துக் கொண்டும், இருக்கிறோம். 

சரி. சாரி. இதோ சந்தோஷத்திற்கான டிப்ஸ்…!

1. தன்னை நேசித்தல் (Self love):

தவறே செய்யாத அல்லது இழப்பையே சந்திக்காத நபர்கள் என்று உலகில் எவருமே இல்லை எனலாம். ஏன் கடவுளர்கள் கூட கர்வத்திலோ, கோபத்திலோ தவறிழைத்து பின் வருந்தியதை நம் புராண கதைகளில் படித்திருக்கிறோமல்லவா?! எதுவுமே முயற்சிக்காதவர்கள் தவறு செய்வதில்லை. வாஸ்தவம் தான். ஆனால், அதுவே ஒரு தவறு என்பதை அவர்கள் உணர்வதில்லை. அப்படி இருக்க, மனிதர்களான நாம் எம்மாத்திரம்…!

”தன்னை நேசிக்கும் ஒருவர் எந்த சூழ்நிலையிலும், இந்த உலகை நேசிப்பார்” என்று பெரியோர்கள் கூறக் கேட்டிருப்போம். 

நாம் தவறிழைக்கும் பொழுதோ, அல்லது நமக்கு சிலர் தவறு இழைக்கும்போதோ, துரோகங்கள் நடக்கும்பொழுதோ, அல்லது சில இழப்புகளை சந்திக்கும்போதோ, அவை நம் மனதை பாதிக்கத்தான் செய்யும். ஆனால், அதற்காக பல காலம், நாம் நம்மை மிகவும் வருத்திக் கொண்டு, சிரமப்பட வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. நம் மீது நாம் கருணையோடு இருக்க வேண்டியது மிக முக்கியம். நம் உயிருக்கு அடுத்ததுதான் மற்ற எதுவுமே.

கடவுள் கொடுத்த இந்த உயிரையும், உடலையும் நேசிப்பது, நாம் நம்மை படைத்தவனை நேசிப்பதற்கு ஒப்பானது. நம்மை நேசிக்கும் பழக்கம், சமூகத்தில், நம்மைச் சூழ்ந்திருக்கும் அனைவரையும் நேசிக்க வைக்கும். மகிழ்ச்சிக்கும் உத்தரவாதம் அளிக்கும். 

2. ஆத்திரம் தவிர் (Avoid rage) :

வாழ்வில் பெரும் பிரபலங்கள், செல்வந்தர்கள், உயர் பதவி வகிப்பவர்கள் ஆகியோர் மட்டும்தான் என்று இல்லாமல், அனைத்து தரப்பினரும் ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கப்படுவது, இழப்புகளை எதிர்கொள்வது நடக்கவே செய்கிறது. அதற்காக, அதற்கு காரணமானவர்களை உடனடியாக பழி வாங்கியே தீருவேன் என்கிற மூர்க்க குணமானது, நம் மகிழ்ச்சிக்கு மாபெரும் தடை.

பிறரின் துரோகம் தாங்கிக் கொள்ள முடியாமல் போவது இயல்புதான். அப்படி செய்தவர்களை மன்னித்து விட்டுவிடுவதா? என்று கேட்டால், சரி, நம்மால் அவர்களை வேறு என்ன செய்து விட முடியும்? என்று பார்த்தால், உண்மை விளங்கும். கெடுதல் செய்பவர்கள் வெளித்தோற்றத்தில் பெரும் பலசாலிகளாக இருந்தாலும், உள்ளுக்குள் அவர்களைப் போன்ற மாபெரும் கோழைகள் யாரும் இல்லை என்பதே நிதர்சனம்.

அவர்கள் அவர்களுக்கான கர்ம கணக்குகளை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். (பல நாள் திருடன்...)
   
நம் சந்தோசத்தை குலைக்கும் செயல்களில் இருந்து, எவ்வளவு வேகமாக நம் கவனத்தை திசை திருப்ப முடிகிறதோ, அந்த அளவுக்கு நாம் மகிழ்ச்சியாக இருக்கலாம்.
  
3. செயல்கள் (Actions):

”உலகின் மிகச் சிறந்த சொல் செயல்” என்பது நாமறிந்ததே. நமது இன்றைய வாழ்க்கை, அது எந்த நிலைமையில் இருந்தாலும், அதற்கு நேரடியாகவோ, மறைமுகமாவோ முக்கிய தருணங்களில் நாமெடுத்த முடிவுகளும், அதை செயல்படுத்தியதுமே காரணமாக இருக்க முடியும்.

எல்.கே.ஜி. படிக்கும் மாணவர் முதல், மாவட்ட நிர்வாகி, வியாபாரி, விவசாயி, நாட்டின் பிரதமர், முதலமைச்சர், விஞ்ஞானிகள், மருத்துவர்கள் என எத்துரையில் முக்கிய பொறுப்பில் வகிப்பவர்களாயினும், அவர்கள் அவர்கள் செய்யும் செயல்களை வைத்தே வகைப்படுத்தப்படுகிறார்கள். சிறப்பினைப் பெறுகிறார்கள்.

குறைந்தபட்சம், ஒரு நாளின் ஒரு அங்குலம் அளவாவது நமது இலக்குகளை நோக்கியோ, அல்லது மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு நமக்கு எது உதவி செய்யுமோ அதை நோக்கி செயல்படுவதே மகிழ்ச்சிக்கு உத்தரவாதம்.

நம்மால் முடிந்த, ஆரோக்கியமான விஷயம் எதுவாக இருந்தாலும், அதை உடனடியாகவும் தொடர்ச்சியாகவும் செயல்படுத்தி வந்தால், மகிழ்ச்சி எப்போதுமே நம் வாழ்வில் குடிகொள்ளும்.

4. நேர மேலாண்மை (Time management):

வாழ்வின் நோக்கம் மகிழ்ச்சியே அல்லவா.  ஆம்! அதன் அடிப்படையில், அனைத்து தரப்பட்டவருக்கும் ஒரு நாளைக்கு 24 மணி நேரமே. அதில் எத்தனை மணி நேரம் நாம் மகிழ்ச்சியாக கழித்தோம் என்பதில்தான் மகிழ்ச்சிக்கான சூத்திரமே இருக்கிறது.

நாம் செய்யும் செயல்களை அதற்கே உண்டான நேரங்களில் அறுதியிட்டு, (சில தவிர்க்க முடியாத காரணங்கள் தவிர) செய்து முடிக்கும் பொழுது, செயல்கள் பூர்த்தி ஆவதுடன், நமது பொழுது போக்கு மற்றும் மகிழ்வாக இருப்பதற்கான நேரத்தை நாம் முழுமையாக அனுபவிக்க முடிகிறது.

எந்தெந்த எண்ணங்கள், பேச்சுக்கள், செயல்கள், பழக்கங்கள் நமக்கும் நம்மைச் சுற்றி இருப்போருக்கும் மகிழ்ச்சி தருகின்றனவோ, அவற்றை தொடர்ந்து செய்து வருவதும், மற்ற எதிர்மறையான, உபயோகமற்ற எண்ணம், செயல், பேச்சுக்களை தவிர்ப்பதும், பொன் போன்ற நேரமானது மிச்சப்படுத்த வழி செய்யும்.

மகிழ்ச்சியான நேரங்களை மகிழ்ச்சியாக செலவிடுவதுடன் மட்டுமல்லாமல், நாம் செய்யும் செயல்களையும் மகிழ்ச்சியோடு செய்யும் மனோபாவத்தால், மகிழ்ச்சி எப்போதும் நம் பாக்கெட்டுகளிலேயே இருக்கும்.

5. மகிழ்ச்சியானவர்களை வாழ்த்துவோம் (Let’s bless Happy people):

ஒரு சுய சோதனை கேள்வி. 
உங்கள் நட்பு, உறவு வட்டாரத்தில் சந்தோஷமாக இருப்பவர்களைப் பற்றி நினைக்கும் பொழுதெல்லாம் மனத்தில் முதலில் என்ன தோன்றுகிறது...?

பிரபஞ்ச விதிப்படி, அடுத்தவர்கள் சந்தோஷத்தைப் பார்த்து பொறாமை கொள்ளும்பொழுது, துக்கத்தையுமே ஈர்க்கிறோம்.  

சந்தோஷமானவர்களைப் பற்றி நினைக்கும் பொழுது அவர்களின் சந்தோஷம் என் மனத்திற்குள்ளும் தொற்றிக் கொண்டால், சபாஷ்! சந்தோஷமானவர்களை வாழ்த்தும்போது, நாமும் சந்தோஷத்தை ஈர்க்கிறோம். நம்மையும் சந்தோஷத்தையும் யாரும் பிரிக்கவே முடியாது. 

6. நன்றி உணர்வு (Gratitude):

சந்தோஷமான வாழ்க்கைக்கு இறுதியான, ஆனால் முக்கியமான ஒரு விஷயம் நன்றியுணர்வு.

நன்றி உணர்வோடு இருப்பதற்கு நமக்கு யாரேனும் மாபெரும் உதவி செய்திருக்க வேண்டிய அவசியமெல்லாம் இல்லை. இன்று இப்போது, இந்த கட்டுரையை படித்துக்கொண்டிருக்கும் அனைவரும் உயிரோடு இருக்கிறோம். (இந்த நேரத்தில் பலர் இறந்து கொண்டிருக்கிறார்கள். இறந்திருக்கிறார்கள்) இதற்கே கடவுளுக்கோ, இயற்கைக்கோ, பிரபஞ்ச சக்திக்கோ நன்றி சொல்ல வேண்டாமா?

இன்றைய வாழ்க்கை நிலைமை எவ்வளவு மோசமானதாக இருந்தாலும், ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்! நம்மை விட மோசமான நிலைமையில் கைகளில் உயிரை மட்டுமே பிடித்து வைத்துக்கொண்டு,(வறுமை கோட்டுக்கு கீழே இருக்கும் நாடுகள், போர் காலங்கள், இயற்கை சீற்றத்தால் உருக்குலையும் நகரங்கள்...) அடுத்த வேளை உணவும், உயிருமே கேள்விக் குறியாக இருக்கும் பல கோடிக்கணக்கான மக்கள் நாம் வாழ்கிற இதே பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நம் மீது கடவுள் காட்டும் கருணை எத்தகையது என்பதை நினைத்து, அவருக்கு ஒவ்வொரு நொடியும் நன்றியோடிருந்தால், மகிழ்ச்சி நம் பாக்கெட்டில்…. இல்லை, இல்லை. அதனடியில் இருக்கும் நம் நெஞ்சில் நிரந்தரமாகக் குடியிருக்கும். உங்கள் சந்தோஷக் கருத்துக்களையும் பகிர்ந்துகொள்ளுங்கள்! மகிழ்ந்திருப்போம். அதிர்வுகளில் இணைந்திருப்போம். நன்றி!

Wednesday, November 27, 2019

Opinion about opinion

According to Google, “opinion” means “a view or judgement formed about something, not necessarily based on fact or knowledge.”

It is not only for famous people, we all have an opinion about something or someone and  express at the right time. That is why it is a common and must needed topic for all, to think and discuss.
A view or judgement refers to statements told by people from their knowledge or experience about something or someone. And, it may not be based on fact or knowledge. Hence, it may or may not be true. 
From this point of view, it is clear that every opinion is based on someone’s preferences, likes and dislikes.That too can not be true to the whole. Because everyone’s preferences, likes and dislikes are also dependent on various conditions and elements such as age, education, culture, upbringing, locality, overall lifestyle, their mood and etc., 
So we should have a clear idea about opinion. Opinions reveal a lot about human beings. In other words, the opinion we have about something or someone tells who we are. Knowingly or unknowingly, we all do have and express our opinion. (the quote “Tell me about your friends; I will tell about you” may pop up. Yes! There you are.)
The following are some of the key factors that influence the opinion:
1. Time:  
Time is one of the main factors that influences the opinion in a huge way. One may like something at one point of time and the same person may dislike it, at different time periods. No opinion can be a permanent one. Everything changes in the course of time. This is the universal fact that everyone accepts.
When the truth is so, how can we be so stick with any particular opinion?
Practice: When there is a heating argument is going on, and there is no need for any urgent decision making from your side, it is better to stay calm and just listen to the other person’s point of view. In fact, in most of the practical life situations, most of the people are too busy in their day-to-day activities that they have no time or patience to think of their situations neutrally without any emotional or sentimental attachment with that particular problem or situation. In most of the cases just listening without any reaction itself is more than enough. Give it a try! 
2. Social/ Economic status: 
Everyone is media person in this gadget-filled world. Everyone is a writer and columnist and giving solution to social problems in various social platforms such as Twitter, Fb, Youtube and etc., It has now become a fashion to write opinion about social activities and many do not worry about the whole history of the events and authentication of the news that they know and nothing. Common people, Celebrities, and media all are simply throwing their opinion on public platforms just like that. 
We see many famous personalities and celebrities show their emotions in media publicly and get into trouble also. It does not mean that they are unaware of the results or reactions of their opinions. The way of expressing the opinion is also very important. Their poor emotional management skills is the reason for it. If one is not clear about the way of expression, that too may lead to lots of confusion, unwanted misunderstandings and misinterpretations.
Practice: Imagine for just a few minutes before expressing an opinion, about the effect or impact or reaction, that our opinion is going to create in that particular platform and then, if you still have the impulse to express it, then you proceed. Most of the time, we will simply change our mind. Because, all our intentions are good. 
3. Day-to-day life situations:
People do have their own partiality, prejudices, biases based on their knowledge and brought up. Everyone of us belongs to various statuses, environment, education, culture, economic status and life style. Those who are listening to an opinion, also has to be more careful in giving response to such opinions. He / she may be forced to give their opinion for that opinion. 
Practice: As a listener (of course judge) we have to think from all aspects rationally, before giving counter-dialogue or solutions or before reacting. 
Dude, Can anyone think about such details at the time of a heating argument? You may ask. You are right. We in fact, should think like this. And it is not an impossible one and it is a skill which can be developed by practice.
Practical: people change themselves based on the heavy pressures of their situation. Or if not, they face the severe effects of their ego, suffer, regret and feel a lot, and then finally realize their mistake. But at that time, they are forced to take a different choice and act upon it. The choice is always ours!  
4. Media: 
We all know the impact of “opinion poll” conducted by various organisations. Various responsible people, media, organisations and even courts have to discuss and tell their opinion  about these “opinion polls”. Modern TV, press media even social platforms such as Facebook, twitter and whats app play vital role in expressing an opinion on any important social events. 
Practice: Nobody can be forced to give opinion. As a public, if we wish to contribute our social responsibility through any social media, it's well and good. Let us do some background research  of current happenings, and then in a neutral tone, we will express our opinion.  
Yes...! An opinion expressed in an appropriate way and tone, has the power to create strong impact.   
5. Mood: 
When discussing about the opinion, “mood” plays a very important role. People’s mood can not be the same all the time. It changes time to time. We all know that. Even intellectual people’s mood is subject to change.
Coming to a conclusion about someone or something, before taking some time to think about that particular matter is really an easy task. But wise people never do that. Because they know that people talk and behave according to their mood.
Practice: Before giving any opinion,let us check our mood at least just for a minute. So simple one right…! 
6. Emotions: 
“Emotion” is one of the main factors that affects the opinion of anyone. You take any regional newspaper or watch any news. There will definitely be some news on murder or suicide or attack or rally or demonstration and protest or arrest of any such kind. Thousands of such incidents are happening all over the country and the world. The common thing behind all of those negative and destructive activities is “emotion”. 
In practical life situations, most of the people find it very difficult to control their emotions. They simply act and react out of their emotions so quickly without a single second thought or intention. Later, they regret for their mistakes and quick reactions and decisions based on their emotions and impulses.
As a reader and listener, we have the power to save our mind from all these negativity. The remote is in our hand only. Where the focus goes energy flows. “Emotion control” is a key leadership quality and it requires constant practice to think rationally before reacting and responding to any situation. 
One may be educated or uneducated or semi educated, rural, urban or male or female, young or aged. Emotion control” is a must needed practice for each and every one of us in this modern, technologically-developed and fast-paced lifestyle. To protect ourselves from mental stress, to maintain the peace of mind, we need this practice. When the mind is calm, decision making becomes easier. 
Practice: When  we are not responding or reacting immediately to any heating arguments with others, it gives us enough time to see things as they are As a result, we can know exactly what happened. And based on that we can think neutrally and take appropriate action. 
Conclusion: There is a difference between reacting and responding. The latter is the choice of wise. There are always choices. Aren’t they? 
Let us keep sharing and supporting positive vibrations! Thanks for reading patiently. Have a good time...!   

- N.VENKATESAN

Tuesday, November 12, 2019

Office Administration & life-style

Hi all, This is not related to Indian economy or economic slow down. 

I would like to share a company's administration-experience of my long term friend. He is very passionate, hard working and highly self-motivated person. He has started his business from scratch level with a TVS-50 bike in Chennai. Now around 20 employees are working in his company. Recently, I received a call from him. I went and met him. He told me that he had sent out few of his employees to home, due to their lack of responsibility. Since he is a busy man, and I also have no business with his company, I did not want to spoil his office hours with my going there and having friendly talks. Only if he calls, I will go and meet him.
Exactly a year ago, I went and met him after his call. He told me that, "I am planning to update my office administration with modern technologies and software. So that it will be easy for me to get any data easily whenever I want. Now I have purchased and installed a software for CRM (Customer Relationship Management) and there are loads of all customer data in Excel format. You just arrange the Excel sheet in such a way so that it can be easily exported in that CRM software. If it is exported in that software once, then it will be easy to enter and update the data and also it will also be useful for the overall viewing and monitoring the data and business". I felt happy to help him any way. So he asked one of his staffs to sit near me and explain me the procedure. 

I, with my little bit of basic excel knowledge and lots of Youtube Tutorials, started to work on Excel sheet and it took around 1 month for me to arrange and edit all the customer data year wise from the beginning of the company to till date.

Whenever I had doubt, I used to call the CRM software installer and clear my doubts and after finishing the excel sheet, my work completed. Then the SRM person came, checked my work and exported it in the software. It was throwing many errors. Even after his efforts of many hours, the problem did not solve. Then the boss (my friend) came and asked to submit the total Customers list for his company. Nobody was unable to help him. He got angry and the CRM person tried to explain the technical part in many ways. But the boss is not satisfied. What he asked was just the total customers of his company. 

At that time, another friend of my boss has returned from abroad. So he called that friend and explained about the company status and current update procedures. That abroad friend said that, "you don't worry; I will take care of this. This CRM matter can be solved with in few hours. leave it to me" and started to work in the Excel sheet. He applied some filters and used some formulas, reordered, edited and did something so fast. I was also watching him. and I went home, since that experienced guy is there to solve this. 

The very next day, that new person called me and told that the CRM problem was solved completely. I felt relief and happy.

Then after 3 months, my friend (boss) called me to his office and I went. Then he told me that he has sent few of his employees including the foreign-returned friend, to home because of their lack of involvement. Then he explained me the whole thing simply. "I wanted to do some update in this business so that I purchased a Software and installed and gave one month training for my employees to use that software. After that, the trainer went. I was thinking that staffs are using that software and updating all transactions in that software. One day, when I realized that my business cash flow is very low, I wanted to check the details and asked about some transaction reports and total customers list. Their office staffs could not give that required report to him. When he got angry and asked the reason, they told that, "Sir, nobody is using that software. nothing is updated in that. we are simply doing what we were doing previously. Sorry! there are really many errors and problems unsolved that we are unable to solve it while using that software". Now he is back to where he started a year back and purpose was not solved. 

The boss, got angry and this time, shouted at everyone and fired them immediately. In fact, if the staff had written all the transactions and details in a notebook on a daily basis, within few hours, they could have submitted the required report to their boss. 

As a owner of a company, thinking about the development and taking necessary action to update and sustain the business is compulsory. But with unproductive staffs and those who are not willing to adapt to the new technologies, and with Robo-like staffs, what can an enthusiastic owner of a company do productively? When any development is not implemented in practical properly, what is the purpose of new technologies and software and education training? Now who will repay the money and time that he invested in that software, training, one year payment for that operator and such thing? According to me, his office is equipped with modern technologies and nice working ambiance. Anyone will be liking to work in such a office. The boss is also a very friendly person and can easily be approached. He used to consider all staffs as his team and friends. But employees were always in low energy. Even after so many meetings, pressures, advice, psychological approaches, he was unable to improve the team spirit among the employees. 

The boss may or may not be present in any company. But all the transactions must be running smoothly. Like Karl marks comparison with the God and the government administration. That kind of office set up and administration and understanding staffs to a company are really a boon to a good boss. MBA, PHD, Foreign job experiences and such things can not help to create awareness, basic common sense, understanding. They are possible only through self analysis, self discipline and team spirit. Let us all think and keep sharing. Thank you all and all the very best!

Thursday, October 10, 2019

எங்கேயும் எப்போதும் - எழுத்துக்கள்.

இன்றைய கேட்ஜெட் மயமான யுகத்தில் எழுதுவது என்பது எழுத்தாளரின் வேலை என்று நினைத்து எவரும் அவ்வளவு சுலபமாக அதனை ஒதுக்கிவிட இயலாது. 
பள்ளி நாட்களில், கையெழுத்து நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக தமிழ் என்றால் இரு வரி நோட்டுகளிலும், ஆங்கிலம் என்றால் நான்கு வரி  நோட்டுகளிலும் எழுதி பழகியது ஓர் அலாதியான அனுபவம். கையெழுத்து நன்றாக இருந்தால் தேர்வில் அதற்கே கூடுதல் மதிப்பெண்கள் கிடைக்கும் என்ற ஒரு சிறு ஆசையும் இதன் பின்னணி காரணங்களில் ஒன்றாக இருந்திருக்கலாம். அதுபோக, கையெழுத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்றிருப்போம். இப்படி எழுதுவதின் மீது இந்த சிஸ்டம் நமக்கு காட்டிய கோணம் மிகக்குறுகியதாக இருந்தாலும், அந்தந்த வயதுகளில் இவை முக்கிய நிகழ்வுகளே.

பள்ளி படிப்பையோ, அல்லது இரண்டுவரி, நான்கு வரி நோட்டு பயிற்சியையோ நிறுத்திய பின்னர், நாம் எழுதும் அனைத்திலும், இல்லாத கோடுகளை இருப்பதாக பாவித்து, அதே அழகு மற்றும் நேர்த்தியோடு எழுதுகிறோமா என்பதை நமக்கு நாமேதான் கேட்டுக்கொள்ள வேண்டும். கையெழுத்து பயிற்சியைத் தவிர்த்த நண்பர்கள், “கையெழுத்து நல்லா இருந்தா, தலையெழுத்து நல்லா இருக்காது மாப்ளே” என்று தங்களின் சோம்பேறித்தனத்தை நகைச்சுவையாய் வெளிப்படுத்தியதும், அவ்வபோது நம் மனதில் திகில் கிளப்பகூடச் செய்திருக்கலாம்.

படிப்பு சுட்டுப் போட்டாலும் வரவே வராது. ஆனாலும், அவன் கையெழுத்து மணி மணியாக, முத்து முத்தாக, கண்ணில் ஒற்றிக் கொள்வது போல இருக்கும் என்பதாலேயே, ஒரு மாணவனை 9-ஆம் வகுப்பு வரை எவ்வளவோ அறிவுரைகள் சொல்லி ஆசிரியர்கள் தேர்ச்சியடைய வைத்தார்கள். 10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற இயலாத அந்த மாணவன், இப்போது ஒரு சிறந்த சுவர் ஓவியராக, வலம் வருகிறார் என்பதும், குறிப்பிடத்தக்க எழுத்தின் தாக்கமே. எழுத்தே தலையெழுத்து!

பெரும்பாலும், படிப்பதை விட, ஒன்றை எழுதும்பொழுது, அதிக கவனம் அந்த பாடத்தின் மீது இருப்பதால், அவை எளிதாக மனதில் பதியும் என்பதே வீட்டுப் பாடங்கள் மற்றும் Imposition-களின் பின்னணியில் உள்ள அறிவியல் பூர்வமான காரணம். இத்தகைய வீட்டுப்பாடங்களையும், அரட்டை அடித்துக்கொண்டோ, டிவி பார்த்துக் கொண்டோ, பாட்டு கேட்டுக் கொண்டோ கடனே என்று எழுதும் அதிமேதாவிகளும் உண்டு. ஹஹா…!

பள்ளிப்பாடங்கள், மதிப்பெண்கள் என்பதை எல்லாம் கடந்து, சுயமாக கட்டுரைகள், கதைகள், கவிதைகள் என்று எழுதும் ஆற்றல் ஒரு சிலரை இழுத்துச் சென்று, பின்னாளில் அவர்கள் பத்திரிக்கை, நாளிதழ் உள்ளிட்ட எழுத்து துறைகளில் பணியாற்றுவதையும், எழுத்தாளர்களாகி அரிய படைப்புகளை எழுதுவதையும் கூட நாம் பார்க்கிறோம். 
அவற்றை வண்ணவண்ண வார்த்தைகள் கோத்து, விளம்பரப்படுத்தி, அவர்களின் படைப்புகளை வாசகர்களிடம் கொண்டு சேர்ப்பதும் எழுத்தே, எழுத்தாளர்களே! படைப்புகளைப் பாராட்டி விமர்சனம் எழுதுகிறவர்களும் எழுத்தாளர்களே.

தொழில்நுட்ப படிப்போ, உயர் படிப்போ படித்திருந்தாலும், சிறப்பாக சுயவிவரம் எழுதியிருந்தால் மட்டுமே, அதற்கான வேலைகளில் இன்று நுழைய முடிகிறது என்பது நிதர்சனம். இதற்கென CV Builders, அதாவது பணம் பெற்றுக்கொண்டு, நமது சுயவிவரம் எழுதிக்கொண்டுக்கும் ஆன்லைன் கம்பெனிகள் ஆயிரம் ஆயிரம் விரவியிருப்பதையும் நாம் அறிவோம்.

விற்பனைப்பிரிவில் அனுபவம் வாய்ந்தவராக இருந்தாலும், ஒரு பொருளையோ, அல்லது சேவையையோ விற்பதற்கு முன்பாக, சம்மந்தப்பட்டவர்களிடம் முன்னதாக அது குறித்த விவரங்களை, மின்னஞ்சல் மூலம் தெளிவாக, கவர்ந்திழுக்கும்படி எழுதி அனுப்ப வேண்டி இருக்கிறது. அதற்கும் எழுதுத்திறமையே அவசியமாகிறது.
தயாரிக்கப்படும் பொருள் அல்லது சேவையை விளம்பரப்படுத்தவும் ஸ்லோகன் போன்ற கவர்ச்சிகரமான வாசகங்களை உருவாக்குவதும் எழுத்தே!

பொருட்களை வாங்கி நுகரும் நுகர்வோரும், அந்த பொருள் பற்றிய விருப்பு, வெறுப்புகளை பகிர்ந்துகொள்ளும் Feedback-ம் இன்றய வியாபாரப் போட்டிகள் நிறைந்த உலகில், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தச் செய்யும் எழுத்துக்கள்தான்.

இவை போக, இன்று நம் நேரத்தின் பெரும்பங்கினை Granted-ஆக எடுத்துக் கொள்ளும், கைப்பேசியிலும், Twitter, FaceBook, Blog, YouTube, என எங்கும் எதிலும் புகைப்படம் மற்றும் வீடியோக்களாக இருந்தாலும், அவற்றின் மூலம் எழுத்துக்களே!

இன்றைய அபரிமிதமான தொழில்நுட்ப வளர்ச்சியில், எந்த நாட்டில் இருந்து வேண்டுமானாலும், எந்த நாட்டில் உள்ளவர்களுக்காகவும் பணியாற்ற கூடிய சூழலில், பணியாளர்களைப் பற்றி முதலாளிகளும், முதலாளிகள் அல்லது நிறுவனம் பற்றி பணியாளர்களும் உட்கார்ந்த இடத்திலிருந்தே அறிந்து கொள்ள உதவுவதும் LinkedIn போன்ற தொழில்முறை சமூக வலைதளங்களே. அவற்றின் ஆதாரமும், பலமும் எழுத்தே!   

முன்னர் சுவரொட்டிகளாகவும், துண்டு பிரசுரங்களாகவும் இருந்த விளம்பர எழுத்துத்தொழில்கள் இன்றும் டிஜிட்டல் வடிவத்தில் மாறி அபரிமிதமாக வளர்ச்சி பெற்றுக் கொண்டிருக்கின்றன. அதன் மூலமும் எழுத்தே! 

இன்றைய அதிவேக உலகில், வியாபார நோக்கில் விவரங்கள் மிகைப்படுத்திக் சொல்லப்பட்டாலும், உண்மைகள் சில மறைக்கப்பட்டாலும், திரிக்கப்பட்டாலும், பல்வேறு வடிவங்களில் நம்மை சூழ்ந்திருக்கும் எழுத்துக்கள் நம் ஆழ் மனத்திலும், அதன் மூலமாக, நம் சிந்தனை முறை, வாழ்க்கை முறையிலும் ஏராளமான தாக்கங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மை.

ஆகவே, எழுதுக்களை வாசித்து பழகுவதன் மூலமாக, எழுதிப் பழகுவதின் மூலமாக, பொருளீட்டும் வாழ்க்கைக்கான உத்தரவாதம் என்பதைத் தாண்டி, எழுத்துக்கள் வாழ்க்கை குறித்த புரிதலையும், தொலை நோக்குப் பார்வையினையும், தெளிவினையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தவே செய்கின்றன.

வாழ்வின் முக்கிய முடிவுகள் எடுக்கும் தருணங்களில், நம் முன்னேயுள்ள வாய்ப்புகள் நம்மை குழப்பத்தில் ஆழ்த்தக்கூடும். அப்போது கூட நடுநிலையோடு, இருவேறு தெரிவுகளின் சாதக, பாதகங்களை பட்டியலிட்டு எழுதிப் பார்க்கையில், எழுத்துக்கள் நம் வாழ்க்கைக்கு வழிகாட்டுகின்றன.

முன்பு மட்டுமல்ல இன்றும் கூட நீண்ட பயணங்களின் சமயத்தில் வாசிக்க புத்தகம் கொண்டு செல்வோரும் உளர். உண்மை என்னவென்றால், இன்று கைப்பேசிக்குள் அனைவரோடும் ஆயிரம் ஆயிரம் புத்தகங்களும் எழுத்துக்களும் கைக்குள்ளேயே எங்கேயும் எப்போதும் சக பயணியாக தொடர்ந்து பயணப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.

இத்தகை முக்கியத்துவம் வாய்ந்த எழுத்துக்களை நாம் தேர்ந்தெடுத்து வாசிப்போம்! நேசிப்போம்! தொடர்ந்து பகிர்வோம்! அதிர்வுகளில் இணைந்திருப்போம்! 

நன்றியுடன், 

-ந.வெங்கடேசன் 

Friday, September 20, 2019

சுடும் நிஜங்கள் – பார்த்து, உணர்ந்து, நடந்து பழகுவோம்!

வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருக்கும் வரையில், நாம் பிறரின் ஆதரவில் வாழும் வரையில், இளங்கன்று பயமறியாது என்பது போல யதார்த்தம் புரியாமல், இளைமை துடிப்பும் ரத்தத்தில் சூடும் வேகமும் இருக்கும் வரையில், நம்மிடம் செல்வம், அழகு, பதவி, நம்மைச் சுற்றிலும் சிலர் இருந்துகொண்டே இருக்கும் வரையில், நம் வாழ்வில் நடப்பவை எல்லாம் நம் திட்டப்படியே நடந்து கொண்டிருப்பதாகத் தோன்றும் வரையில், வெளியிலிருந்து ஏதோ ஒன்று நம்மை உற்சாகப்படுத்துவதாய் நினைத்துக் கொண்டிருக்கும் வரையில், யதார்த்தம் என்பது வெறும் வார்த்தையாகவோ, அல்லது சிலரது சோக கீதங்களாகவோதான் தெரியும். 


யதார்த்தத்தை பேசுவோர்களை, புகழ்வோர்களை, யதார்த்தமாய் நடப்பவர்களை வாழ்க்கையில் தோற்றுப் போனவர்கள் என்றோ அல்லது வாழத்தெரியாதவர்கள் என்றோ அல்லது அறியாமையில் இருப்பவர்களாகவோ கருதி அவர்களையும், அவர்களின் உணர்வுகளையும், அவர்களின் மதிப்புகளையும், அதற்குள் பொதிந்துள்ள அனுபவமிக்க வாழ்க்கையையும் நாம் கண்டுகொள்ளாமல் ஒதுக்கியும் விடலாம். அவர்களின் தத்துவங்களை தீண்டத்தகாதவைகளாகவும், அவர்களை தீண்டத்தகாதவர்களாகவும் ஒதுக்கி விடலாம்.

யதார்த்தவாதிகளையோ, போராடிக் கொண்டிருப்பவர்களையோ ஏன் நாம் பார்க்க வேண்டும் என்றோ, அவற்றில் எல்லாம் கவனம் செலுத்தவெல்லாம் நமக்கேதப்பா நேரம் என்று நேரமின்மையைக் காரணமாகவோ சொல்லிக்கொள்ளலாம். சோம்பேறித்தனத்திற்கு, நேரத்தின் மேல் பழி போடுவதென்பது மிகவும் சுலபமான ஒன்று. பெரும்பான்மையானவர்களால் மிக எளிதாக இதனை மட்டும்தான் எப்போதும் செய்ய முடியும்.

ஆனால் எப்படி சூரிய சந்திரர்கள் தங்கள் கடமையையை தவறாது செய்கின்றார்களோ, இயற்கை எப்படி தன் கடமையை சரியாகச் செய்து கொண்டிருக்கிறதோ அது போல காலம் தன் கடமையை மிகச்சரியாக  செய்து கொண்டேதான் இருக்கிறது. காலம் என்னும் சக்கரமானது ஒரு நாள், ஒரு மணி நேரம், ஒரு நிமிடம், ஏன் ஒரு நொடி கூட ஓய்வொழிச்சல் இன்றி சுழன்று கொண்டேதான் இருக்கிறது.

எந்த ஒரு செயலையும் கடந்த காலத்தில் நிகழ்ந்தது என்று சொல்வதை விட, எதிர்காலத்தில் நிகழும் என்று சொல்வதை விட, நிகழ்காலத்தில் நடந்து கொண்டிருக்கிறது என்று சொல்வதிலும், எப்போதும் இதுதான் விதி என்று சொல்வதிலும்தான் அதன் உறுதித்தன்மை பொட்டில் அறைந்தாற் போல் உரைக்கிறது. உண்மை கசக்கத்தான் செய்யும். கசப்பு உடம்பிற்கு நல்லது. உண்மை மனதிற்கு நல்லது.  

இன்றைய சந்தோஷம் நாளைய துக்கமாக மாறுவதும், இன்றைய பொறுமை நாளைய சந்தோஷமாக மாறுவதும் காலம் நம்மை வைத்து செய்து காட்டும் படம், பாடம், மாயாஜலாம். 

சட்டப்படி தவறு செய்பவர்கள், நிச்சயமாக சட்டப்படி தண்டிக்கபடுகிறார்கள். இதை பரபரப்பாக இருக்கை நுனியில் உட்கார வைத்து, உணர்ச்சியைச் சுரண்டிச் சொல்லும் ஊடகங்கள் ஆயிரமாயிரம்.

மனசாட்சிப்படி தவறு செய்பவர்கள் தவறை உணர்ந்து வருந்தி, அதற்கான பிராயசித்தம் செய்தே ஆக வேண்டும். இதுதான் அனைத்து உலகங்களின் நியதியும் விதியும். இதற்கு அனைவரின் மனமுமே உறுதியான ஆதாரம். இது கடவுளுக்கும் பொருந்தும். நாம் எம்மாத்திரம்?

”தர்மத்தின் பக்கம் இருப்பவனே தர்மவான்! உண்மையும், தூய்மையும், அன்புமே அழியாச் செல்வம். முடிவு இல்லாதது எதுவுமில்லை. அந்த முடிவில் வெல்வது தர்மத்தை தவிர வேறொன்றும் இல்லை….!” தெய்வத்தின் குரல்.

அதிர்வுகளில் இணைந்திருப்போம்!
ந,வெங்கடேசன்

Wednesday, July 24, 2019

நினைத்ததை ஈர்க்க காட்சிப்படுத்துதல் - Visualization


காட்சிப்படுத்துதல்
பிரபஞ்ச ஈர்ப்பு விதியை பயன்படுத்தி நம் வாழ்வில் நமக்கு தேவையானவற்றை ஈர்க்க சில யுக்திகள் வகுக்கப்பட்டு உலகெங்கிலும் பல கோடி மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பது நாம் அறிந்ததே. அத்தகைய ஈர்ப்பு விதிகளில் முக்கியமான ஒரு யுக்தி “காட்சிப்படுத்துதல்” (Visualisation). வீடியோ விளக்கம்

காட்சிப்படுத்துதல் பயிற்சியானது, நமக்கும் நம் லட்சியத்திற்குமான ஒரு இணைப்பு பாலம் போன்று செயல்படுகிறது. 


”நாம் சாதிக்க, அல்லது ஈர்க்க விரும்புபவற்றை, (ஏற்கெனவே சாதித்து விட்டது போன்று) உணர்வுப்பூர்வமாக நம் மனத்திரையில் ஒரு படம் போல ஓட்டிப் பார்ப்பதே “காட்சிப்படுத்துதல்”. நம் குறிக்கோள்களை அடைந்து விட்டது போன்ற ஒரு பாவத்துடன் காட்சிப்படுத்தி பார்ப்பது சிறப்பு.

காட்சிப்படுத்துதலுக்கு சில உதாரணங்கள்:
ஒரு கடை வைக்க வேண்டும் என்பது இலட்சியமாக இருந்தால், நம் கடையின் பெயர் பலகை நம் கடையின் வடிவமைப்பு, சுவர் வர்ணம், இண்டீரியர் டிசைன்ஸ், ஃபர்னிச்சர்கள் ஃபிக்ஸ் செய்திருக்கும் முறை என அனைத்து விவரங்களையும் மனக்கண்ணில் பார்க்க வேண்டும். மேலும், நாம் கல்லாவில் உட்கார்ந்திருப்பது, வாடிக்கையாளர்களிடம் இருந்து பணத்தினை வாங்கி நம் கல்லாவில் போட்டுக்கொள்வது, வாடிக்கையாளர்கள் திருப்தியடைவது, நிறைய வாடிக்கையாளர்களுடன் தொலை பேசியில் பேசுவது, லாபம் ஈட்டுவது மற்றும் தொழில் வளர்ந்து வருவது போன்றெல்லாம் உணர்வுப்பூர்வமாக மனக்காட்சியினை ஓட்டிப் பார்க்க வேண்டும்.

இதைப் போன்று எதை நாம் வாழ்வில் சாதிக்க நினைக்கிறோமோ, அதற்கான மனக்காட்சிப் படங்களை நாம் உருவாக்கி ஓடிப் பார்த்துக் கொள்ளலாம்.

பயிற்சி கால அளவு:
முதலில் கார் ஓட்டப் பழகும்பொழுது, இது க்ளட்ச், இது பிரேக், இது ஆக்சிலேட்டர். முதலில் க்ளட்சினை அழுத்தி, கியரை மாற்றிவிட்டு, பின் கிளட்சினை மெல்ல விடுவித்து, ஆக்சிலரேட்டரை கொடுக்க வேண்டும் என்று ஒவ்வொரு செயலினையும் மெனக்கெட்டு யோசித்து செய்கிறோம். இதுவே 3 அல்லது 6 மாதம் கார் ஓட்டிப் பழகிவிட்டால், பின்பு இவை எதைப் பற்றியும் கண்டுகொள்ளாமல், அலட்சியமாக, அருகில் இருப்பவர்களோடு அல்லது தொலைபேசியில் பேசிக்கொண்டோ அல்லது வெளியே வேடிக்கை பார்த்தவாறோ, அதே நேரம் காரினையும் பாதுகாப்பாக ஓட்டும் அளவிற்கு, காரோட்டும் கலையானது நம் ஆழ்மனதில் பதிந்துவிடுகிறது அல்லவா!. இதே போன்று நாம் வாழ்வில் சாதிக்க விரும்புபவை பற்றிய காட்சிப் படமும், நம் ஆழ்மனத்தில் நன்கு பதியவேண்டும்.

காட்சிப்படுத்துதலுக்கான நேரம்:
ஈர்ப்பு விதிகளில் உள்ள மற்ற யுக்திகள் போன்றே, காட்சிப்படுத்துதலை செய்வதற்கென்று பிரத்யேகமான நேரமோ எண்ணிக்கையோ எதுவும் இல்லை. இருப்பினும், இரவு தூங்கச்செல்லும் முன்பும், அதிகாலை கண் விழித்ததும் இந்த காட்சிப்படுத்துதலை செய்து வந்தால், அது நம் ஆழ்மன பதிவுகளை மாற்ற உதவும்.

எப்போது நாம் சோர்வாக உணர்கிறோமோ, அல்லது ஒரு எனர்ஜி பூஸ்ட் அல்லது சுய ஊக்கம் வேண்டும் என்று நினைக்கிறோமோ, அப்பொழுது கண்களை முடினால், அடுத்த நொடியே காட்சிப்படுத்துதல் உலகினுள் மிக எளிதாக நுழைந்துவிட வேண்டும். அந்த அளவிற்கு ஆழ் மனதில் பதிந்துவிட வேண்டும்

வாழ்க்கைக்கான ”மாதிரி படத்தினை” உருவாக்கி மனக்கண்ணில் அடிக்கடி ஓட்டிப் பார்த்து பழகுவோம்! பிரபஞ்ச சக்தியோடு இணைந்து செயல்படுவோம். தொடர்ந்து பகிர்வோம்.
அதிர்வுகளில் இணைந்திருப்போம்! நன்றி.

ஆற்றல்கள் - Energies

வாழ்வை தீர்மானிக்கும் ஆற்றல்.

நம் எண்ணம், சொல், செயல் அனைத்துமே எனர்ஜி அல்லது ஆற்றல் தான். பிரபஞ்ச ஆற்றலுடன் நம் ஆற்றலும் இணைந்தே செயல்படுகிறது. அறிந்தோ அறியாமலோ, நாம் எனர்ஜியை வெளியிட்டுக்கொண்டும், பெற்றுக்கொண்டும் தான் இருக்கிறோம். நாம் வெளிப்படுத்தும் எனர்ஜியே, அதன் அதிர்வுகள் மூலமாக, நம் வாழ்வில் தாக்கத்தினை ஏற்படுத்துகிறது. சொல்லப்போனால், நம் வாழ்வினையே தீர்மானிக்கிறது எனலாம்.
ஆற்றலின் வகைகள்.
நமது சுபாவங்களுக்கு ஏற்ப, ஆற்றலை இரு வகைப்படுகிறது.

1. குறைந்த அலைவரிசை ஆற்றல் (Low-frequency Energies)
நாம் எப்பொழுதெல்லாம் விரும்பத்தகாத அல்லது எதிர்மறையான எண்ணங்களில் இயங்குகிறோமோ அப்பொழுது குறைந்த அலைவரிசை ஆற்றலை வெளியிடுகிறோம். எண்ணம், சொல், செயல் என்ற மூன்றிற்கும் இது பொருந்தும்.

சில குறைந்த அலைவரிசை ஆற்றல்கள்.
அடிக்கடி தேவையின்றி கோபப்படுவது, உணர்ச்சிவசப்பட்டு பேசுவது, செயல்படுவது, ஒரு பொருளையோ, விஷயத்தையோ, நபரையோ வெறுப்பது, பொறாமைபடுவது, திருடுவது, பொய் சொல்வது, பழிவாங்கும் எண்ணம், சுயநலத்தோடு செயல்படுவது, மன உளைச்சலில் இருப்பது, நமக்கும் மற்றும் பிறருக்கும் உடல்ரீதியாகவோ, மன ரீதியாகவோ பாதிப்பு ஏற்படும் படி நடந்துகொள்ளும் அனைத்தும் குறைந்த அலைவரிசை ஆற்றல்களின் வெளிப்பாடே.

நாம் நமது எண்ணம், சொல், செயல் மூலமாக, இத்தகைய அலைவரிசையினை வெளிப்படுத்தும்போது, அதிலிருந்து நமக்கு திரும்பவும் கிடைப்பவை யாவும், அதற்கு ஒத்த குறைந்த அலைவரிசைகள்தான்.

தீயவற்றை எண்ணாதே! சொல்லாதே, செய்யாதே.! தீயவர்களோடு பழகாதே! துஷ்டனை கண்டால் தூர விலகு! என்று இதைத்தான் நம் பெரியோர்களும், நலம்விரும்பிகளும் அவர்கள் பாணியில் சொல்கிறார்கள். அவர்களின் கூற்றுக்குப் உள்ள விஞ்ஞானமும் இதுவே.

2. உயர்-அலைவரிசை ஆற்றல் (High-frequency Energies)

நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் அனைத்து எண்ணம், சொல், செயலும் “உயர் அலைவரிசை ஆற்றலே”.

அன்பாக, நேர்மையாக, உண்மையாக பழகுவது, நம்மையும், பிறரையும் சமமாக, உயர்வாக நினைப்பது, பிறருக்கு முடிந்தவரை உதவி செய்வது, பிறருக்கு தொல்லை இன்றி வாழ்வது, நிபந்தனையற்ற அன்பு, காதல், உடன் பழகுவோர் செய்த தவறுகளை மன்னிப்பது, எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பது பொதுநலத்தோடு செயல்படுவது, வாழ்க்கையில் ஒரு நல்ல லட்சியத்திற்காக செயல்படுவது போன்றவை உயர்-அலைவரிசைகளை வெளிப்படுத்தும்.

இத்தகைய செயல்களில் ஈடுபடுவதன் மூலமாக, நாம் அதற்கு இணையான விளைவுகளை, நல்ல பலன்களை, நன்மைகளை நம் வாழ்வில் ஈர்க்கிறோம். நம் வாழ்வைத் தீர்மானிக்கும் ஆற்றல்கள் நம்மிடமே கொட்டிக்கிடக்கின்றன. எது வேண்டும் என்பதை நாம் தான் தேர்வு செய்துகொள்ள வேண்டும். 

நம் பெரியோர்களும், நலம்விரும்பிகளும், “நல்லதே நினை! நல்லதே நடக்கும்! நல்லவர்கள், நேர்மையானவர்கள், உயர்ந்த சிந்தனையும், தாராள மனப்பான்மையும் கொண்டிரு. அப்படிப்பட்டவர்களோடு பழகு!  எதை விதைக்கிறோமோ அதைத்தான் அறுவடை செய்ய முடியும். என்று சொல்வதற்கெல்லாம் பின்னணியில் உள்ள விஞ்ஞானம் இதுவே.

இதுதான் எண்ணம் போல் வாழ்கை என்பதும். தொடர்ந்து பகிர்வோம்! நன்றி. 
அதிர்வுகளில் இணைந்திருப்போம்.
ந.வெங்கடேசன்.

Tuesday, July 9, 2019

நினைத்ததை ஈர்க்க | உறுதிமொழிகள் | AFFIRMATIONS

AFFIRMATIONS - உறுதிமொழிகள்

நாம் நினைத்தை ஈர்க்க, பிரபஞ்ச விதிகளை திறம்பட பயன்படுத்துவது எப்படி?

இந்த பிரபஞ்சத்தில் அனைத்தும் ஆற்றலே. நிகழ்பவை அனைத்தும் அதன் அதிர்வுகளுக்கு உட்பட்டவையே. அத்தகைய அதிர்வுகளை நமக்குள்ளும் ஏற்படுத்தி நாம் நம் இலக்கை அடைய முடியும். அதற்கான பல வழிகளில் ஒன்றுதான் பிரபஞ்ச ஈர்ப்பு விதி.
நாம் தற்போது என்ன மனநிலையில் இருக்கிறோம், எந்த விதமான அதிர்வுகளை எண்ணம், சொல், செயல் மூலமாக இந்த பிரபஞ்சத்திற்கு அனுப்பிக் கொண்டிருக்கிறோமோ, அதற்கு இணையான சம்பவங்களை, நிகழ்வுகளைத்தான் நம் வாழ்வில் ஈர்க்கிறோம். சொல்லப்போனால், அதற்கு இணையான வாழ்வினைத்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

வாழ்க்கையில் மாற்றம் வேண்டும் என்று நினைப்பவர்கள், எண்ணத்தின் அதிர்வுகளில், மனநிலையில் மாற்றத்தினை ஏற்படுத்துவதன் மூலம், புற உலகிலும் மாற்றங்களை ஏற்படுத்த முடியும். இதுவே ஈர்ப்புவிதியின் அடிப்படை. மனநிலையை மாற்றுவதற்கு பல யுக்திகள் உள்ளன. அவற்றுள் ஒன்றுதான் ”உறுதி மொழிகள்” (“சுயவாக்கியம்” சுய-கட்டளைகள்) அல்லது “AFFIRMATIONS”.

பொதுவாக நாம் மற்றவர்களுக்கு சத்தியம் செய்து கொடுத்தால், அதை எப்படியாவது நிறைவேற்றிவிடுவோம் அல்லவா? அதே போல நம் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த நமக்கு நாமே செய்துகொள்ளும் சத்தியம் என்று இந்த உறுதிமொழிகளைக் வைத்துக் கொள்ளலாம்.

சரி, உறுதிமொழிகளை எப்படி அமைக்க வேண்டும்?

பிரபஞ்சத்திற்கு தெரிந்தது, பிரபஞ்சம் கவனிப்பது மற்றும் பிரதிபலிப்பது ”நிகழ் காலம்” ஒன்றை மட்டுமே. நமது இறந்தகாலமோ, எதிர்காலமோ அதற்கு தேவையில்லை. எனவே நம் உறுதிமொழிகளை நிகழ்காலத்தில் இருக்கும்படி அமைத்துக் கொள்ளலாம்.

உறுதிமொழிகளை எப்பொழுது, எப்படி சொல்ல வேண்டும்?

அதிகாலை கண்விழித்தவுடன்” சொல்வதும், ”இறவு தூங்கும் முன்” சொல்வதும் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை. ஏனெனில் அவை நமது ஆழ்மனம் செயல்பட ஆரம்பிக்கும் நேரம். அப்போது நாம் நினைக்கும் எதுவும், அப்படியே ஆழ்மனத்திற்கு கட்டளையாக சென்றடையும். அது நம் வாழ்வில் பிரதிபலிக்கத் தொடங்கும்.

மேலும் உறுதிமொழிகளை எப்பொழுதெல்லாம் நாம் களைப்பாகவும், சோர்வாகவும் உணர்கிறோமோ அப்பொழுதெல்லாம் கூறலாம். 

எத்தனை முறை வேண்டுமானாலும் கூறலாம். எண்ணிக்கை முக்கியமில்லை. ஆனால் நாம் உறுதிமொழிகளை உணர்ந்து, உணர்வுப் பூர்வமாக சொல்ல வேண்டும் என்பதுதான் முக்கியம்.

முதலில், இல்லாத ஒன்றை சொல்வது போலவோ, பொய் சொல்வது போலவோ சில நேரம் தோன்றலாம். நம் வாழ்வினை நாம்தானே மாற்ற வேண்டும்…? சரி, சில உதாரண வாக்கியங்களைப் பார்க்கலாம்.

ஆரோக்கியத்திற்கான உறுதிமொழிகள்: 
  1. நான் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறேன். 
  2. என் உடல் எனக்கு அனைத்து வகையிலும் பரிபூரணமாக ஒத்துழைப்பு தருகிறது. 
  3. என் உடலை நான் நல்ல முறையில் பராமரிக்கிறேன்.
  4. நான் ஆரோக்கியமாக இருக்கிறேன். 

செல்வத்திற்கான உறுதிமொழிகள்:
  1. நான் ஒரு செல்வந்தன்.
  2. என்னிடம் அபரிமிதமாக பணம் இருக்கிறது.
  3. நான் பணத்தை நேசிக்கிறேன்.
  4. பணம் என்னை நேசிக்கிறது.
  5. என்னிடம் தேவைக்கும் அதிகமாக பணம் இருக்கிறது.
  6. என்னிடம் இருக்கும் பணத்தின் மூலம், எனது அனைத்து தேவைகளும் பூர்த்தி அடைகிறது.
  7. நான் என்னிடமுள்ள பணத்தினை நல்லவற்றிற்காக பயன்படுத்துகிறேன்.
இதுபோல நமக்கு என்ன தேவையோ, அதற்கு ஏற்ற உறுதிமொழி வாக்கியங்களை அமைத்து பயிற்சி செய்து வரலாம்.

சிறு குறிப்பு:
உறுதிமொழி வாக்கியங்களில் எதிர்மறை வார்த்தைகளை தவிர்க்கவும். 
உதாரணமாக குறிப்பிட்ட நோயிலிருந்து விடுபட விரும்பினால், “நான் இந்த வியாதியிலிருந்து விடுபட்டுவிட்டேன் அல்லது வியாதி நீங்கவிட்டது” என்று வாக்கியம் அமைப்பதை தவிர்க்கவும். ஏனெனில், “வியாதி” என்பது எதிர்மறையான வார்த்தை.  

பண உறுதி மொழிகளில், “நான் பண பிரச்சனையிலிருந்து வெளிவந்துவிட்டேன்” என்று சொல்லத் தேவையில்லை. “பிரச்சனை” என்பது எதிர்மறை வார்த்தை. எதிர்மறை வாத்தைகளை கவனிக்கும் பிரபஞ்சம், எதிர்மறையான நிகழ்வுகளை நமக்கு திருப்பி அளிக்கும்.

எத்தனை நாள் உறுதி மொழி கூறினால் நினைத்தது நடக்கும்?

இது முற்றிலும் ஆழ்மன பதிவுகளில் மாற்றங்களை ஏற்படுத்தும் பயிற்சி என்பதால், ஒவ்வொருவரின் பிறப்பு, வளர்ந்த விதம், சிறு வயது முதல் சந்தித்த மனிதர்கள், ஏற்பட்ட அனுபவங்கள், உறவினர்கள், நண்பர்கள், உடன் பழகுபவர்கள் போன்றவற்றால் பல வருடகாலமாக ஆழ்மனதில் பதிவாகியிருக்கும் பதிவுகளைப் பொறுத்து இது செயலாற்றும் காலம் மாறுபடும். வாழ்க்கையை மாற்றியே ஆக வேண்டுமென்றால், எண்ணம், சொல், செயல்களில் மாற்றம் ஏற்படுத்தியே ஆக வேண்டும்.

வாழ்த்துக்கள்! தொடர்ந்து பகிர்வோம்! நன்றி !

அதிர்வுகளில் இணைந்திருப்போம். 

-ந.வெங்கடேசன்